கிரிக்கெட்

ஐ.பி.எல்.லில் 6 ஆயிரம் ரன்கள்; விராட் கோலி சாதனை + "||" + 6,000 runs in IPL; Virat Kohli record

ஐ.பி.எல்.லில் 6 ஆயிரம் ரன்கள்; விராட் கோலி சாதனை

ஐ.பி.எல்.லில் 6 ஆயிரம் ரன்கள்; விராட் கோலி சாதனை
விராட் கோலி ஐ.பி.எல். போட்டிகளில் 6 ஆயிரம் ரன்கள் கடந்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார்.
புனே,

14வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 16வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் வான்கடே ஸ்டேடியத்தில் விளையாடின.  இதில், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியின் 177 ரன்களை பெங்களூரு அணி சேசிங் செய்து விளையாடியது.

வெற்றி இலக்கான 178 ரன்களை நோக்கி விளையாடிய பெங்களூரு அணியில், தொடக்க ஆட்டக்காரர் மற்றும் அணி கேப்டனான விராட் கோலி போட்டியில் அரை சதம் விளாசினார்.  அதனுடன் 51வது ரன் எடுத்தபொழுது, 6 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.  13வது ஓவரில் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

இந்த பட்டியலில் டாப் 5 வரிசையில் 4 பேர் இந்திய வீரர்கள் ஆவர்.  கோலிக்கு அடுத்து, சுரேஷ் ரெய்னா (5,448), ஷிகர் தவான் (5,428) ஆகியோர் முறையே 2 மற்றும் 3வது இடங்களில் உள்ளனர்.

டேவிட் வார்னர் (5,384) மற்றும் ரோகித் சர்மா (5,368) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.  கோலி தனது 196வது போட்டியில் இந்த சாதனையை படைத்துள்ளார்.  இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பெருந்தொற்று காலத்திலும் வேளாண் உற்பத்தியில் விவசாயிகள் சாதனை: பிரதமர் மோடி புகழாரம்
கொரோனா பெருந்தொற்று காலத்திலும் வேளாண் உற்பத்தியில் விவசாயிகள் சாதனை படைத்து உள்ளனர் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.
2. 1,500 படங்களில் நடித்து சாதனை புரிந்த மனோரமா
தென்னிந்திய மொழிகளில் 1,500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சாதனை புரிந்தவர், மனோரமா. திரையுலகினரால் ‘‘ஆச்சி’’ என்று அன்புடன் அழைக்கப்பட்ட அவர், 50 ஆண்டுகளாக திரைத்துறையில் நீடித்தார்.
3. ஜிம்பாப்வேக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: தொடரை வென்றது பாகிஸ்தான்
பாகிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹராரேவில் நேற்று நடந்தது.
4. அமெரிக்காவில் ஒரே நாளில் 40 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி புதிய சாதனை
கொரோனா வைரஸ் பாதிப்பில் உலக அளவில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வரும் அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மின்னல் வேகத்தில் நடந்து வருகின்றன.
5. காரைக்குடி பள்ளி மாணவி சாதனை
காரைக்குடி பள்ளி மாணவி சாதனை