கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: வங்காளதேச அணி 474 ரன்கள் குவிப்பு + "||" + Test against Sri Lanka: Bangladesh accumulate 474 runs

இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: வங்காளதேச அணி 474 ரன்கள் குவிப்பு

இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: வங்காளதேச அணி 474 ரன்கள் குவிப்பு
இலங்கை-வங்காளதேச அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்லகெலேயில் நடந்து வருகிறது.

இதில் முதலில் பேட் செய்த வங்காளதேச அணி தொடக்க நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் எடுத்து இருந்தது. நஜ்முல் ஹூசைன் ஷன்டோ 126 ரன்னுடனும், கேப்டன் மொமினுல் ஹக் 64 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய மொமினுல் ஹக் 224 பந்துகளில் சதத்தை எட்டினார். டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த 11-வது சதம் இதுவாகும். வெளிநாட்டு மண்ணில் அவரது முதல் சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. நிலைத்து நின்று ஆடிய நஜ்முல் ஹூசைன் ஷன்டோ 163 ரன்கள் எடுத்த நிலையில் லஹிரு குமரா பந்து வீச்சில் அவரிடமே ‘கேட்ச்’ கொடுத்து வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு நஜ்முல் ஹூசைன்-மொமினுல் ஹக் ஜோடி 242 ரன்கள் சேர்த்தது கவனிக்கத்தக்கது. அடுத்து மொமினுல் ஹக் (127 ரன்) கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். மழையால் ஆட்டம் சில மணி நேரம் பாதிக்கப்பட்டதுடன், போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் முன்கூட்டியே முடித்து கொள்ளப்பட்டது. நேற்றைய ஆட்டம் முடிவில் வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 155 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 474 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது. முஷ்பிகுர் ரஹிம் 43 ரன்னுடனும், லிட்டான் தாஸ் 25 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இன்று 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணி அபார வெற்றி
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
2. கொழும்பு துறைமுக விரிவு ஒப்பந்தம் : சீன நிறுவனத்துக்கு வழங்கியது இலங்கை அரசு
இலங்கையின் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்துவதில் சீனா தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது
3. இலங்கை-வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்: 3-ம் நாள் ஆட்டம் மழையால் பாதிப்பு!
இலங்கை-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் மழையால் பாதிப்படைந்தது.
4. இலங்கையில் படகு கவிழ்ந்து விபத்து- 7 பேர் பலி
பள்ளி மாணவர்கள் உள்பட 23 பேருடன் சென்று கொண்டிருந்த போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
5. இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணி திணறல்
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி திணறி வருகிறது.