ஐ.பி.எல். போட்டியில் இருந்து நடராஜன் விலகல்?


ஐ.பி.எல். போட்டியில் இருந்து நடராஜன் விலகல்?
x
தினத்தந்தி 22 April 2021 10:15 PM GMT (Updated: 22 April 2021 11:14 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியில் இடம் பிடித்திருந்த தமிழகத்தை சேர்ந்த இடக்கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் கால்முட்டி காயத்தால் அவதிப்பட்டு வருகிறார்.

இதனால் முதல் 2 ஆட்டத்தில் களம் இறங்கிய அவர் அதன் பிறகு விளையாடவில்லை. இந்த நிலையில் ஐ.பி.எல்.-ல் எஞ்சிய போட்டிகளில் இருந்து அவர் விலகி இருப்பதாக ஐதராபாத் அணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த ஆண்டு ‘யார்க்கர்’பந்து வீச்சில் கலக்கிய நடராஜனுக்கு இந்த சீசன் மிகுந்த ஏமாற்றமாக அமைந்துள்ளது.


Next Story