கிரிக்கெட்

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி: சரிவில் இருந்து மீளுமா பஞ்சாப்? + "||" + IPL Cricket: Will Punjab bounce back from a slump?

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி: சரிவில் இருந்து மீளுமா பஞ்சாப்?

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி: சரிவில் இருந்து மீளுமா பஞ்சாப்?
பஞ்சாப் கிங்ஸ் அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 4 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தியது.
அதன் பிறகு 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சிடமும், 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்சிடமும், 9 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் சன்ரைசர்சிடமும் அடுத்தடுத்து தோல்வி கண்டது. ஐதராபாத்துக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் பஞ்சாப் 120 ரன்னில் சுருண்டது. சென்னைக்கு எதிராக 106 ரன்னில் அடங்கியது. தொடர்ச்சியாக சரிவை சந்தித்துள்ள பஞ்சாப் அணி அதில் இருந்து மீண்டு வர வேண்டும் என்றால் பேட்ஸ்மேன்கள் எழுச்சி பெற வேண்டியது அவசியமாகும்.

5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதலாவது ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சிடம் தோல்வியை தழுவியது. அடுத்த ஆட்டங்களில் 10 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சையும், 13 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் சன்ரைசர்சையும் வீழ்த்தியது. கடந்த ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்சிடம் பணிந்தது. 

அந்த ஆட்டத்தில் அமித் மிஸ்ராவின் சுழலில் சிக்கிய மும்பை அணி 9 விக்கெட்டுக்கு 137 ரன்கள் எடுத்து முடங்கியது. கடந்த 4 ஆட்டங்களில் வெறும் 35 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கும் ‘ஆல்-ரவுண்டர்’ ஹர்திக் பாண்ட்யா முதுகுவலி பிரச்சினை காரணமாக பந்து வீசாமல் இருப்பதும் மும்பை அணிக்கு சற்று பின்னடைவாக உள்ளது. அவர் தனது ஆட்டத்தை கச்சிதமாக வெளிப்படுத்தினால் அந்த அணி மேலும் வலுப்பெறும். மொத்தத்தில் பலம் வாய்ந்த மும்பைக்கு எதிராக நிலையற்ற ஆட்டத்தை வெளிபடுத்தி வரும் பஞ்சாப் அணி ஈடுகொடுக்குமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

(குறிப்பு: நேரடி ஒளிபரப்பு ஸ்டார் ஸ்போர்ட்ஸ்)

தொடர்புடைய செய்திகள்

1. நிலக்கரி தட்டுப்பாடு: பஞ்சாபில் மின் தடை
நிலக்கரி பற்றாக்குறை காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
2. ஐ.பி.எல்: கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சு தேர்வு
கொல்கத்தா அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
3. எனது இறுதி மூச்சு உள்ள வரை உண்மைக்காக போராடுவேன்-நவ்ஜோத் சிங் சித்து
எனது இறுதி மூச்சு உள்ள வரை உண்மைக்காக போராடுவேன் என நவ்ஜோத் சிங் சித்து டுவிட்டரில் வீடியோ பதிவிட்டுள்ளார்.
4. பஞ்சாப் கிங்ஸ்க்கு எதிராக மும்பை அணி வெற்றி பெற 136 ரன்கள் இலக்கு
இன்று நடைபெற்று வரும் பஞ்சாப் கிங்ஸ்க்கு எதிரான ஐ.பி.எல் போட்டியில் மும்பை அணி வெற்றி பெற 170 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
5. ஐ.பி.எல்: பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சு தேர்வு
பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.