கிரிக்கெட்

ஐ.பி.எல். போட்டியில் ஜோப்ரா ஆர்ச்சர் விளையாடமாட்டார்; இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு + "||" + Rajasthan Royals Fast Bowler Jofra Archer Ruled Out Of IPL 2021, Says England Cricket Board

ஐ.பி.எல். போட்டியில் ஜோப்ரா ஆர்ச்சர் விளையாடமாட்டார்; இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

ஐ.பி.எல். போட்டியில் ஜோப்ரா ஆர்ச்சர் விளையாடமாட்டார்; இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் ஐ.பி.எல். போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அங்கம் வகிக்கிறார்.

இதற்கிடையில் கையில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஜோப்ரா ஆர்ச்சர் சமீபத்தில் பயிற்சியை தொடங்கினார். இதனால் அவர் ஐ.பி.எல். போட்டியில் கடைசி கட்டத்தில் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் ஜோப்ரா ஆர்ச்சர் விளையாடமாட்டார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்துள்ளது. சுஸ்செஸ் அணியினருடன் இணைந்து ஜோப்ரா ஆர்ச்சர் அடுத்த வாரம் பயிற்சியில் ஈடுபட இருப்பதாகவும், அவர் பிரச்சினையின்றி தொடர்ந்து பந்து வீசினால் 2 வாரத்துக்கு பிறகு களம் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் எந்த ஆட்டத்தில் விளையாடுவார் என்பதை பின்னர் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. 20-ஓவர் உலக கோப்பை: இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் அணி அறிவிப்பு
கிரிக்கெட் உலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்றான இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் 20 ஓவர் போட்டி நாளை நடைபெறுகிறது.
2. இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52 ஆயிரத்தை தாண்டியது
இங்கிலாந்தில் கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவாக ஒரேநாளில் 50,000 க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
3. இங்கிலாந்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புதிதாக 49,139 பேருக்கு தொற்று
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 49,139 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. பயிற்சி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன.
5. இங்கிலாந்தில் மனைவியை கொலை செய்த இந்திய கணவருக்கு ஆயுள் தண்டனை
இங்கிலாந்தில் மனைவியை கொலை செய்து உடலை சாலையில் வீசிச்சென்ற இந்திய கணவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.