கிரிக்கெட்

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டார் அக்ஷர் பட்டேல் + "||" + Axar Patel recovers from COVID-19

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டார் அக்ஷர் பட்டேல்

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டார் அக்ஷர் பட்டேல்
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள 27 வயது ஆல்-ரவுண்டரான அக்ஷர் பட்டேலுக்கு கடந்த 3-ந் தேதி மும்பையில் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையின் போது கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதனை அடுத்து தனிமைப்படுத்தப்பட்ட அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு பதில் மாற்று வீரராக மும்பையை சேர்ந்த இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ஷம்ஸ் முலானியை டெல்லி அணி ஒப்பந்தம் செய்தது. இந்த நிலையில் 3 வார கால சிகிச்சைக்கு பிறகு அக்ஷர் பட்டேல் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு குணமடைந்துள்ளார். தற்போது அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இல்லை என்பதை குறிக்கும் ‘நெகட்டிவ்’ முடிவு வந்துள்ளது. இதனை அடுத்து அக்ஷர் பட்டேல் சென்னையில் உள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியினருடன் நேற்று இணைந்தார். அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக டெல்லி அணி நிர்வாகம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது. டெல்லி அணி சென்னையில் நாளை நடைபெறும் தனது அடுத்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்சை சந்திக்கிறது. இந்த ஆட்டத்தில் அக்ஷர் பட்டேல் விளையாட வாய்ப்பு உள்ளது.