கிரிக்கெட்

பாகிஸ்தான் அறிமுக வீரர் வீசிய பவுன்ஸரில் ஜிம்பாப்வே பேட்ஸ்மேனின் ஹெல்மெட் இரண்டாக உடைந்தது + "||" + Pak bowler Arshad Iqbal's bouncer breaks Zimbabwean batsman's helmet into two

பாகிஸ்தான் அறிமுக வீரர் வீசிய பவுன்ஸரில் ஜிம்பாப்வே பேட்ஸ்மேனின் ஹெல்மெட் இரண்டாக உடைந்தது

பாகிஸ்தான் அறிமுக வீரர் வீசிய  பவுன்ஸரில் ஜிம்பாப்வே பேட்ஸ்மேனின் ஹெல்மெட் இரண்டாக உடைந்தது
பாகிஸ்தான் அறிமுக வீரர் வீசிய அதிவேக பவுன்ஸரில் ஜிம்பாப்வே பேட்ஸ்மேனின் ஹெல்மெட் இரண்டாக உடைந்தது.
ஹராரே

ஜிம்பாப்வே நாட்டுக்கு பாகிஸ்தான் அணி பயணம் மேற்கொண்டுள்ளது. 3  இருபது ஓவர் போட்டிகள்  3 ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் அணி விளையாட உள்ளது. முதல் 20 ஓவர் போட்டியில் பாகிஸ்தான் அணி வென்ற நிலையில் 2-வது 20 ஓவர் போட்டி நேற்று நடந்தது.

இதில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் சேர்த்தது. 119 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் 99 ரன்களுக்கு ஆட்டமிழந்து 18 ரன்களில் தோல்வி அடைந்தது.

20 ஓவர் போட்டிகளிலேயே பாகிஸ்தான் அணியை முதல் முறையாக ஜிம்பாப்வே அணி நேற்றுதான் தோற்கடித்துள்ளது. இதற்கு முன் 16 முறை மோதியும் தோல்வி அடைந்திருந்த நிலையில் விடாமுயற்சி வெற்றியைத் தேடித் தந்துள்ளது.

20 ஓவர்  உலகக்கோப்பை நெருங்கி வரும் நிலையில் ஜிம்பாப்வே போன்ற கத்துக்குட்டி அணியிடம் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் அர்ஷத் இக்பால் வீசிய பவுன்ஸர் ஜிம்பாப்வே பேட்ஸ்மேனின் ஹெல்மெட்டில் பட்டு இரண்டாக உடைந்தது.

அர்ஷத் இக்பால் 7-வது ஓவரை வீசினார். களத்தில் கமுகுகான்வே, மருமானி இருந்தனர். அர்ஷத் வீசிய பந்தை கமுகுகான்வே எதிர்கொண்டார். அர்ஷத் 3-வது பந்து அதிவேக பவுன்ஸராக வீச, அது கண்ணிமைக்கும் நேரத்தில் பேட்ஸ்மேன் கமுகுகான்வே ஹெல்மெட்டில் பட்டுத் தெறித்தது. பந்து பட்ட வேகத்தில் கமுகுகான்வே ஹெல்மெட் இரண்டாக உடைத்தது. (குறுக்கே இரண்டாக உடையாமல் மேல்பகுதி மட்டும் தனியாக உடைந்து கழன்று கீழே விழுந்தது)

கிரிக்கெட்டில் இதுபோன்று பேட்ஸ்மேனின் ஹெல்மெட் இரு பிரிவுகளாக உடைந்த சம்பவம் வரலாற்றில் இல்லை. இரண்டாகக் கீறல் விழுந்துள்ளது. ஆனால், இதுபோன்று மேல்பகுதி மட்டும் தனியாகக் கழன்று உடைந்து கீழே விழுந்தது இல்லை. கிரிக்கெட்டில் இது அரிதான நிகழ்வாகும்.

கமுகுகான்வே ஹெல்மெட்டில் அடிபட்டு சுருண்டதைப் பார்த்ததும் பாகிஸ்தான் வீரர்கள் விரைந்து வந்து அவருக்கு உதவி செய்தனர். அதற்குள் ஜிம்பாப்வே உடற்தகுதி நிபுணர் வந்து கமுகுகான்வேயின் தலைப் பகுதி, கழுத்துப் பகுதி ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

தலையில் இதுபோன்று பந்து பட்டால், கன்கஸன் முறைப்படி பேட்ஸ்மேனுக்கு பதிலாக வேறு பேட்ஸ்மேனைக் களமிறக்கலாம். ஆனால், கமுகுகான்வே சில நிமிடங்கள் முதலுதவிக்குப் பின் மீண்டும் களமிறங்கி 34 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தான் தூதரின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது- பாக்.வெளியுறவு அமைச்சகம்
பாகிஸ்தானுக்கான ஆப்கானிஸ்தான் தூதரின் மகள் கடத்தப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
2. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யஷ்பால் சர்மா மரணம் -ஜனாதிபதி இரங்கல்
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யஷ்பால் சர்மா மாரடைப்பால் உயிரிழந்தார்
3. பாக். வான்வெளியை பயன்படுத்துவதை இந்திய விமானப்படை விமானம் தவிர்த்ததாக தகவல்
ஆப்கானிஸ்தானில் இருந்து தூதரக ஊழியர்களை அழைத்து வந்த இந்திய விமானப்படை விமானம் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்தவில்லை எனத்தகவல் வெளியாகியுள்ளது.
4. பாகிஸ்தானுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: 52 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி
பாகிஸ்தானுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 52 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது.
5. இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர்கள் 3 பேர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் 4 பேர் என மொத்தம் 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.