சேப்பாக்கம் ஆடுகளம் மீது ஸ்டோக்ஸ், பிரெட்லீ சாடல்


சேப்பாக்கம் ஆடுகளம் மீது ஸ்டோக்ஸ், பிரெட்லீ சாடல்
x
தினத்தந்தி 24 April 2021 10:16 PM GMT (Updated: 24 April 2021 10:16 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கத்தில் நடந்த பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை அணி 6 விக்கெட்டுக்கு 131 ரன்கள் மட்டுமே எடுத்தது.

திறமையான மும்பை பேட்ஸ்மேன்கள் திணறியதை சுட்டிகாட்டி சேப்பாக்கம் ஆடுகளத்தை விமர்சித்துள்ள இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘ஐ.பி.எல். போன்ற பெரிய போட்டிகளில் ஆடுகளங்கள் மோசமானதாக இருக்கக்கூடாது. குறைந்தது 160-170 ரன்கள் எடுக்கக்கூடிய ஆடுகளம் தேவையே தவிர 130-140 ரன்களுக்குரிய ஆடுகளம் அல்ல. இத்தகைய குறைந்த ரன் ஆடுகளத்தை தூக்கி போடுங்கள்’ என்று கூறியுள்ளார். இதே போல் ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட்லீ, ‘உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இது ஒரு அதிர்ச்சிக்குரிய ஆடுகளம் தான். பேட்ஸ்மேன்கள் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறுகிறார்கள். பந்து வீச்சாளா்களுக்கும் ஆடுகளம் கடினமாகவே இருக்கிறது. பந்து ‘ஸ்விங்’ ஆகவில்லை. எனவே இது சிறந்த ஆடுகளம் அல்ல’ என்றார்.


Next Story