கிரிக்கெட்

ஐ.பி.எல் கிரிக்கெட்: 69 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி + "||" + IPL-2021 chennai super kings beats rcb

ஐ.பி.எல் கிரிக்கெட்: 69 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி

ஐ.பி.எல் கிரிக்கெட்: 69 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் 69 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி பெற்றது.
மும்பை,

சென்னை சூப்பர் கிங்ஸ்- ஆர்சிபி அணிகள் மோதிய ஐபிஎல் தொடரின் 19-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்தது. டு பிளிஸ்சிஸ் 41 பந்தில் 50 ரன்களும், ஜடேஜா 28 பந்தில் ஆட்டமிழக்காமல் 4 பவுண்டரி, 5 சிக்சருடன் 62 ரன்களும் விளாசினர்.

பின்னர் 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி களம் இறங்கியது. படிக்கல் அதிரடியை வெளிக்காட்ட, விராட் கோலி நிதான ஆட்டத்தை தொடங்கினார். ஆர்சிபி 3.1 ஓவரில் 44 ரனகள் எடுத்திருக்கும்போது விராட் கோலி 8 ரன்னிலும் வெளியேறினார்.

மறுமுனையில் விளையாடி படிக்கல் ஷர்துல் தாகூர் வீசிய 5-வது ஓவரின் கடைசி பந்தில் 15 பந்தில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
 
அதன்பின் வாஷிங்டன் சுந்தர் (7), மேக்ஸ்வெல் (22), டி வில்லியர்ஸ் (4) ஆகியோர் ஜடேஜா பந்து வீச்சில் ஆட்டமிழக்க ஆர்சிபி அத்துடன் சரணடைந்தது. இதற்கிடையில் டான் கிறிஸ்டியனை ரன்அவுட் மூலம் வீழ்த்தினார் ஜடேஜா. 10.1 ஓவரில் 83 ரன்களுக்கும் ஆர்சிபி முக்கிய ஐந்து விக்கெட்டுகளை இழந்தது.

அதன்பின் 20 ஓவர் வரை விளையாடி 9 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் அடித்தது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் 69 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சாஹல் 21 பந்தில் 8 ரன்கள் எடுத்தும், முகமது சிராஜ் 14 பந்தில் 12 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கடைசி ஐந்து கடைநிலை வீரர்கள் 60 பந்துகளை சந்தித்தனர்.

சென்னை அணி சார்பில் ஜடேஜா 3 விக்கெட்டும் இம்ரான் தாஹிர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பெங்களூர் அணி தொடர்ந்து நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று வந்த நிலையில் இன்றைய 5-வது போட்டியில் தோல்வியைத் தழுவியது. சென்னை அணி இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் தொடர்ந்து நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பாதுகாப்பான சூழல் இல்லாவிட்டால் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியாவில் நடத்தக்கூடாது; கம்மின்ஸ் பேட்டி
கொரோனா அச்சுறுத்தலால் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பாதியிலேயே காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்போட்டி திட்டமிட்டபடி நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.