கிரிக்கெட்

இலங்கை-வங்காளதேசம் முதலாவது டெஸ்ட் ‘டிரா’ + "||" + Sri Lanka-Bangladesh first Test draw

இலங்கை-வங்காளதேசம் முதலாவது டெஸ்ட் ‘டிரா’

இலங்கை-வங்காளதேசம் முதலாவது டெஸ்ட் ‘டிரா’
இலங்கை-வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்லகெலேயில் கடந்த 21-ந்ேததி தொடங்கியது.

இதில் முதலில் பேட் செய்த வங்காளதேசம் 7 விக்கெட்டுக்கு 541 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 4-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 512 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் கருணாரத்னே (234 ரன்), தனஞ்ஜெயா டி சில்வா (154 ரன்) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 648 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. கருணாரத்னே 244 ரன்னிலும், தனஞ்ஜெயா டி சில்வா 166 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 107 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய வங்காளதேசம் 2 விக்கெட்டுக்கு 100 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் அத்துடன் இந்த டெஸ்ட் டிராவில் முடித்துக் கொள்ளப்பட்டது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் இதே மைதானத்தில் வருகிற 29-ந்தேதி தொடங்குகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்; இந்திய அணியில் பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ் சேர்ப்பு
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி தொடங்க உள்ளது.
2. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: மழையால் போட்டி துவங்குவதில் தாமதம்
மழை காரணமாக முதல் நாள் ஆட்டத்தின் முதல் செஷனில் ஆட்டம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. டெஸ்ட் தொடருக்காக இங்கிலாந்துக்கு செல்லும் இந்திய கிரிக்கெட் வீரர்களை 18 நாட்கள் தனிமைப்படுத்த திட்டம்
டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்காக இங்கிலாந்துக்கு செல்லும் இந்திய கிரிக்கெட் வீரர்களை மொத்தம் 18 நாட்கள் தனிமைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
4. இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இங்கிலாந்து 205 ரன்னில் ‘ஆல்-அவுட்’
ஆமதாபாத்தில் நேற்று தொடங்கிய இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி 205 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது.
5. 3-வது டெஸ்ட்: இந்தியா அபார பந்து வீச்சு: 112- ரன்களில் சுருண்டது இங்கிலாந்து
இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 112-ரன்களில் ஆல் அவுட் ஆனது.