ஜிம்பாப்வேக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: தொடரை வென்றது பாகிஸ்தான்


ஜிம்பாப்வேக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: தொடரை வென்றது பாகிஸ்தான்
x
தினத்தந்தி 25 April 2021 11:16 PM GMT (Updated: 25 April 2021 11:16 PM GMT)

பாகிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹராரேவில் நேற்று நடந்தது.

இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுக்கு 165 ரன்கள் சேர்த்தது. முகமது ரிஸ்வான் (91 ரன், 60 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் பாபர் அசாம் (52 ரன்) அரைசதம் அடித்தனர். முன்னதாக பாபர் அசாம் சர்வதேச 20 ஓவர் போட்டியில் 2 ஆயிரம் ரன்களை கடந்தார். இதன் மூலம் இந்த மைல்கல்லை அதிவேகமாக எட்டியவர் (52 இன்னிங்ஸ்) என்ற சாதனையை நிகழ்த்தினாா். இதற்கு முன்பு இந்திய கேப்டன் விராட் கோலி 56 இன்னிங்சில் 2 ஆயிரம் ரன்களை எடுத்ததே அதிவேகமாக இருந்தது. அவரது சாதனையை பாபர் அசாம் முறியடித்திருக்கிறார்.

தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 141 ரன்களே எடுக்க முடிந்தது. வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இதன் மூலம் பாகிஸ்தான் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.


Next Story