கிரிக்கெட்

கொல்கத்தாவை வீழ்த்தியது ராஜஸ்தான்: பவுலா்களுக்கு சஞ்சு சாம்சன் பாராட்டு + "||" + Rajasthan beat Kolkata: Sanju Samson praises Paul

கொல்கத்தாவை வீழ்த்தியது ராஜஸ்தான்: பவுலா்களுக்கு சஞ்சு சாம்சன் பாராட்டு

கொல்கத்தாவை வீழ்த்தியது ராஜஸ்தான்: பவுலா்களுக்கு சஞ்சு சாம்சன் பாராட்டு
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பையில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை தோற்கடித்தது.

 இதில் முதலில் பேட் செய்த கொல்கத்தா 9 விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுக்க, இந்த இலக்கை ராஜஸ்தான் 18.5 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. 4 விக்கெட் கைப்பற்றிய ராஜஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் மோரிஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.வெற்றிக்கு பிறகு ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறுகையில், ‘இது ஒரு அற்புதமான செயல்பாடு. கடந்த 4-5 ஆட்டங்களாக எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி வருகிறார்கள். இளம் பவுலர் சேத்தன் சகாரியா வித்தியாசமான ஒரு வீரர். பதற்றமில்லாமல் செயல்படக்கூடியவர். இது ராஜஸ்தானுக்கு சாதகமான ஒரு அம்சமாகும். வருங்காலத்தில் அவர் நிறைய ஆட்டங்களில் வெற்றி தேடித்தருவார் என்று நம்புகிறேன்’ என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து டிரென்ட் பவுல்ட் விலகல்?
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஆடிய நியூசிலாந்து வீரர்களில் கேன் வில்லியம்சன் உள்பட 4 பேர் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக வருகிற 11-ந்தேதி டெல்லியில் இருந்து நேரடியாக இங்கிலாந்துக்கு கிளம்புகிறார்கள்.
2. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த விரும்பும் கவுண்டி அணிகள்
பாதியிலேயே தள்ளிவைக்கப்பட்டு உள்ள ஐ.பி.எல். கிரிக்கெட்டில் எஞ்சிய ஆட்டங்களை நடத்த இங்கிலாந்தில் உள்ள கவுண்டி அணிகள் முன்வந்துள்ளன.
3. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற விருத்திமான் சஹா, அமித் மிஸ்ரா கொரோனாவால் பாதிப்பு
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற ஐதராபாத் அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
4. ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பை அணியை சமாளிக்குமா ஐதராபாத்?
5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சிடம் வீழ்ந்தது.
5. ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு 167 ரன்கள் இலக்கு
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 166 ரன்கள் எடுத்துள்ளது.