ஐ.பி.எல். கிரிக்கெட்: புதிய இடத்தில் ஜொலிக்குமா கொல்கத்தா?


ஐ.பி.எல். கிரிக்கெட்: புதிய இடத்தில் ஜொலிக்குமா கொல்கத்தா?
x
தினத்தந்தி 25 April 2021 11:46 PM GMT (Updated: 25 April 2021 11:46 PM GMT)

இந்த சீசனில் மும்பை மற்றும் சென்னையில் 20 லீக் ஆட்டங்கள் நேற்றுடன் நிறைவு பெற்று விட்டன.

இனி அடுத்த இடத்துக்கு ஐ.பி.எல். நகர்கிறது. இதன்படி பஞ்சாப்-கொல்கத்தா மோதும் ஆட்டம் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தை கொண்ட ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. ஆடுகளத்தன்மை மற்றும் அங்குள்ள சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்வது தான் இரு அணிகளுக்கும் சவாலான விஷயமாக இருக்கும்.

கொல்கத்தா அணியில் நட்சத்திர பட்டாளம் அதிகம் இருந்தாலும் களத்தில் அவர்களின் பாய்ச்சா எடுபடவில்லை. அதனால் தான் 5 ஆட்டங்களில் 4-ல் தோற்று பின்தங்கியுள்ளது. கேப்டன் மோர்கன் பார்மில் இல்லாதது பின்னடைவாக அமைந்துள்ளது. ஒருங்கிணைந்து செயல்பட்டால் கொல்கத்தா உண்மையிலேயே அபாயகரமான அணி தான். புதிய இடத்திலாவது வெற்றிப்பாதைக்கு திரும்புமா? என்பதை பார்க்கலாம்.

பஞ்சாப் அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி 2-ல் வெற்றியும், 3-ல் தோல்வியும் கண்டுள்ளது. முந்தைய ஆட்டத்தில் மும்பையை 9 விக்கெட் வித்தியாசத்தில் பந்தாடியதும், அதில் லோகேஷ் ராகுல், கிறிஸ் கெய்ல் ரன்வேட்டை நடத்தியதும் அந்த அணியின் நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளது. இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் தென்பட்டாலும் பஞ்சாப்பின் கையே சற்று ஓங்கி  நிற்கிறது.

(குறிப்பு: நேரடி ஒளிபரப்பு ஸ்டார் ஸ்போர்ட்ஸ்)

Next Story