கிரிக்கெட்

காமன்வெல்த் கிரிக்கெட்: இந்தியா உள்பட 6 அணிகள் தகுதி + "||" + Commonwealth Cricket: 6 teams including India qualify

காமன்வெல்த் கிரிக்கெட்: இந்தியா உள்பட 6 அணிகள் தகுதி

காமன்வெல்த் கிரிக்கெட்: இந்தியா உள்பட 6 அணிகள் தகுதி
22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் அடுத்த ஆண்டு (2022) ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதம் நடக்கிறது.

இதில் பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி முதல்முறையாக சேர்க்கப்பட்டுள்ளது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிக்கு போட்டியை நடத்தும் நாடு என்ற முறையில் இங்கிலாந்தும், கடந்த 1-ந் தேதி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தரவரிசைப்படி ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளும் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. வெஸ்ட்இண்டீஸ் மண்டலத்தில் இருந்து ஒரு நாடு தகுதி பெறும். எஞ்சிய ஒரு அணி தகுதி சுற்று போட்டி மூலம் முடிவாகும். தகுதி சுற்று போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இறுதிக்குள் நடைபெறும் என்றும் அது குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ஐ.சி.சி. அறிவித்துள்ளது.