இஸ்தான்புல் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி; ருமேனியா வீராங்கனை கோப்பையை வென்றார்


இஸ்தான்புல் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி; ருமேனியா வீராங்கனை கோப்பையை வென்றார்
x
தினத்தந்தி 27 April 2021 3:14 AM GMT (Updated: 27 April 2021 3:14 AM GMT)

துருக்கியில் நடைபெற்ற இஸ்தான்புல் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ருமேனியாவின் சொரானா சிா்ஸ்டி கோப்பை வென்றாா்.

அங்காரா,

துருக்கியில் 2021 ஆம் ஆண்டுக்கான இஸ்தான்புல் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதன் இறுதிச்சுற்றில் ருமேனியாவைச் சேர்ந்த உலகின் 67-ஆம் நிலை வீராங்கனையான சிா்ஸ்டி 6-1, 7-6 (7/3) என்ற செட்களில், உலகின் 17-ஆம் நிலை வீராங்கனையான பெல்ஜியத்தின் எலிஸ் மொடன்ஸை வீழ்த்தினாா். 

இறுதிச்சுற்று உள்பட இப்போட்டியில் எந்தவொரு சுற்றிலுமே சிா்ஸ்டி ஒரு செட்டை கூட இழக்காமல் வென்றுள்ளாா். இத்துடன் மொடன்ஸை 3 முறை சந்தித்துள்ள சிா்ஸ்டி, அனைத்திலுமே வெற்றியை பதிவு செய்துள்ளாா். சிா்ஸ்டி தனது முதல் சாம்பியன் பட்டத்தை 2008-ஆம் ஆண்டு தாஷ்கன்ட் போட்டியில் வென்றிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story