கிரிக்கெட்

ஐபிஎல் தொடர் முடிந்து வீரர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்கள்: ஐபிஎல் நிர்வாகம் உறுதி + "||" + Players to return home safely after IPL series: IPL management

ஐபிஎல் தொடர் முடிந்து வீரர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்கள்: ஐபிஎல் நிர்வாகம் உறுதி

ஐபிஎல் தொடர் முடிந்து வீரர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்கள்: ஐபிஎல் நிர்வாகம் உறுதி
ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் நாடு திரும்புவதற்கான நடவடிக்கைகளை பிசிசிஐ கவனித்துக்கொள்ளும் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மெல்போர்ன்,

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், இந்தியாவுடனான நேரடி விமான சேவைக்கு மே 15- ஆம் தேதி வரை தடை விதித்து ஆஸ்திரேலிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியாவில் ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  

இதற்கிடையில், ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் நாடு திரும்ப சிறப்பு விமானத்தை அனுமதிக்க வேண்டும்  மும்பை இந்தியன்ஸ் அணிக்காக  விளையாடி வரும் கிறிஸ் லின்  கோரிக்கை விடுத்து இருந்தார். இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய வீரர்கள் நாடு திரும்ப சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படாது என அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார். அவர்கள் சொந்த ஏற்பாடுகளின் படியே நாடு திரும்ப முடியும் எனவும் ஆஸ்திரேலியா தெரிவித்தது. 

அதேபோல், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து,இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் வீரர்களும் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகின்றனர். இதனால், தொடர் முடிந்ததும் வெளிநாட்டு வீரர்கள் தாயகம் திரும்புவதற்கான நடவடிக்கைகளை பிசிசிஐ உறுதி செய்யுமா? என்ற கேள்விகள் எழுந்தன. இந்த நிலையில், வீரர்களின் பாதுகாப்பே முக்கியம் எனத்தெரிவித்துள்ள ஐபிஎல் நிர்வாகம், தொடர் முடிந்ததும், வீரர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்புவார்கள் என உறுதி அளித்துள்ளது. 

ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் நாடு திரும்புவதற்கான நடவடிக்கைகளை பிசிசிஐ கவனித்துக்கொள்ளும். வீரர்களின் பாதுகாப்பு கருதி கொரோனா விதிமுறைகளை மேலும் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளோம். தொடரில்  பங்கேற்றுள்ள வீரர்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்பே எங்களுக்கு முதன்மையான நோக்கம். இனி வீரர்களுக்கு 5 நாட்களுக்கு பதில் 2 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை எடுக்கப்படும். தொடரில் பங்கேற்றுள்ள வீரர்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்பே எங்களுக்கு முதன்மையான நோக்கம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. ஐபிஎல் கிரிக்கெட் : 2 புதிய அணிகள் அறிவிப்பு
அடுத்த ஆண்டு நடைபெறும் 15-வது ஐ.பி.எல். போட்டியில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
2. ஐபிஎல் கோப்பை யாருக்கு? இறுதிப்போட்டியில் சென்னை- கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை
14-வது ஐபிஎல் தொடரில் எந்த அணி கோப்பையை உச்சிமுகரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
3. ஐபிஎல் 2-வது தகுதி சுற்று: கொல்கத்தாவுக்கு 136 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம்
கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 135 ரன்கள் சேர்த்துள்ளது.
4. ஐபிஎல் 2-வது தகுதி சுற்று ஆட்டம்: கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சு
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.
5. ஐ.பி.எல்: வெளியேற்றுதல் சுற்று ஆட்டம்- பெங்களூரு அணி முதலில் பேட்டிங்
ஐபிஎல் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.