ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணியின் வெற்றிப்பயணம் தொடருமா?


ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணியின் வெற்றிப்பயணம் தொடருமா?
x
தினத்தந்தி 27 April 2021 8:57 PM GMT (Updated: 27 April 2021 8:57 PM GMT)

தொடக்க ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்சிடம் தோல்வி அடைந்த சென்னை அணி அதன் பிறகு பஞ்சாப், ராஜஸ்தான், கொல்கத்தா, பெங்களூரு அணிகளை வரிசையாக வீழ்த்தி 8 புள்ளிகளுடன் கம்பீரமாக பயணிக்கிறது.

குறிப்பாக முந்தைய ஆட்டத்தில் பலம் வாய்ந்த பெங்களூருவை வெறும் 122 ரன்னில் சுருட்டி அசத்தியது. பாப் டு பிளிஸ்சிஸ்- ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி நல்ல தொடக்கம் அமைத்து தருவதும், ரவீந்திர ஜடேஜா ஆல்-ரவுண்டராக ஜொலிப்பதும் சென்னை அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருக்கிறது. அதே உத்வேகத்துடன் வெற்றியை தொடரும் முனைப்புடன் சென்னைஅணி ஆயத்தமாகி வருகிறது. ஆனால் சென்னை அணி இதுவரை மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் ஆடி வந்தது. இந்த ஆட்டம் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடக்க இருக்கிறது. இது மெதுவான தன்மை கொண்ட ஆடுகளமாகும். இங்குள்ள சூழலுக்கு தக்கபடி தங்களை மாற்றிக்கொள்வது தான் வீரர்களுக்கு சவாலான விஷயமாக இருக்கும்.

ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி ஒரு வெற்றி, 4 தோல்வி என்று 2 புள்ளியுடன் பரிதாபமாக கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. டெல்லிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் ஐதராபாத் அணி சூப்பர் ஓவர் வரை போராடி தோல்வி அடைந்தது. வில்லியம்சனின் வருகை அந்த அணிக்கு புத்துணர்ச்சி அளித்தாலும், கேப்டன் வார்னரிடம் இருந்து இன்னும் தீவிரமான அதிரடி வெளிப்படாதது அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. இதே போல் மிடில் வரிசை பேட்ஸ்மேன்களும் நிலைத்து நின்று ஆட வேண்டிய நெருக்கடியில் உள்ளனர். காயத்தால் முந்தைய ஆட்டத்தில் ஆடாத வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் இன்றைய ஆட்டத்தில் ஆடுவாரா? என்பதில் உறுதியில்லை.

(குறிப்பு: நேரடி ஒளிபரப்பு ஸ்டார் ஸ்போர்ட்ஸ்)

Next Story