கிரிக்கெட்

ஐ.பி.எல். போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களை கடந்த 2வது வெளிநாட்டு வீரர்; ஏபி டி வில்லியர்ஸ் சாதனை + "||" + IPL 2nd foreign player to score 5,000 runs in matches; AB de Villiers record

ஐ.பி.எல். போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களை கடந்த 2வது வெளிநாட்டு வீரர்; ஏபி டி வில்லியர்ஸ் சாதனை

ஐ.பி.எல். போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களை கடந்த 2வது வெளிநாட்டு வீரர்; ஏபி டி வில்லியர்ஸ் சாதனை
ஐ.பி.எல். போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களை கடந்த 2வது வெளிநாட்டு வீரர் என்ற புதிய சாதனையை ஏபி டி வில்லியர்ஸ் படைத்து உள்ளார்.
ஆமதாபாத்,

14வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஆமதாபாத்தில் நடந்த 22வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் விளையாடின.

இதில் பெங்களூரு அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான ஏபி டி வில்லியர்ஸ் புதிய சாதனை படைத்து உள்ளார்.  அவர் ஐ.பி.எல். போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களை கடந்த 2வது வெளிநாட்டு வீரர் என்ற வரலாறை படைத்திருக்கிறார்.

5 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வெளிநாட்டு வீரராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் உள்ளார்.

பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி 6,041 ரன்களுடன் ஐ.பி.எல். போட்டிகளில் அதிக ரன்களை எடுத்த வீரராக உள்ளார்.  இவரை தொடர்ந்து சுரேஷ் ரெய்னா (5,472) உள்ளார்.  இதுதவிர, ஐ.பி.எல்.லில் 5 ஆயிரம் ரன்களை கடந்த வீரர்களாக இந்தியாவின் ஷிகர் தவான் மற்றும் ரோகித் சர்மா உள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல். போட்டி: 50 அரை சதங்கள் அடித்து டேவிட் வார்னர் சாதனை
ஐ.பி.எல்.லில் 50 அரை சதங்கள் அடித்த முதல் வீரர், 200 சிக்சர்கள் உள்பட பல சாதனைகளை டேவிட் வார்னர் படைத்துள்ளார்.
2. ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்து இலங்கை வீரர் திசரா பெரேரா சாதனை
கிளப் அணிகளுக்கான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடந்து வருகிறது.
3. ‘கர்ணன்’ படத்தின் சாதனை
தனுஷ் நடித்துள்ள ‘கர்ணன்’ படத்தை எஸ். தாணு தயாரிக்க, மாரி செல்வராஜ் டைரக்டு செய்து இருக்கிறார்.
4. 100 மீட்டர் தூரத்தை 47 வினாடிகளில் ஓடி உலக சாதனை: 3 வயது சிறுவனை பாராட்டிய மாவட்ட கலெக்டர்
100 மீட்டர் தூரத்தை 47 வினாடிகளில் ஓடி உலக சாதனை: 3 வயது சிறுவனை பாராட்டிய மாவட்ட கலெக்டர்.
5. சென்னை மெரினாவில் உள்ள நினைவிடத்தில் ஜெயலலிதாவின் சாதனைகளை விளக்கும் அருங்காட்சியகம், அறிவுசார் பூங்கா; எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில், அவரது வாழ்நாள் சாதனைகளை விளக்கும் அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்காவை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.