கிரிக்கெட்

ஐபிஎல் தொடரில் இருந்து இரண்டு அம்பயர்கள் விலகல் + "||" + Umpires Nitin Menon and Paul Reiffel latest to pull out of IPL 2021

ஐபிஎல் தொடரில் இருந்து இரண்டு அம்பயர்கள் விலகல்

ஐபிஎல் தொடரில் இருந்து இரண்டு அம்பயர்கள் விலகல்
ஐபிஎல் போட்டியின் அம்பயர்களான நிதின் மேனன் மற்றும் பால் ரீபில் ஆகியோர் தொடரிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி, 

நாட்டில் நிலவும் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணங்களை சுட்டிக்காட்டி ஒரு சில வீரர்கள் இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐ.பி.எல்) இருந்து விலகிய நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக இத்தொடரிலிருந்து விலகுவதாக நிதின் மேனன் மற்றும் பால் ரீபில் ஆகிய அம்பயர்கள் தெரிவித்துள்ளனர். 

நிதின் மேனனின் தாய் மற்றும் மனைவிக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில் அவர் இம்முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

கொரோனா அதிகரிப்பால் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு பயணிகள் வர அந்நாட்டு அரசு தடை விதித்தது. இந்நிலையில் ஆஸ்திரேலியரான பால் ரீபில் உடனடியாக புறப்பட்டுவிட்டார் என்று தெரிகிறது. இவர்கள் இருவருக்கு பதில் மாற்று அம்பயர்களை பிசிசிஐ அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தல் இருந்தாலும் உரிய பாதுகாப்புகளுடன் ஐபிஎல் தொடர் நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது