இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு 5 முன்னாள் வீராங்கனைகள் விண்ணப்பம்


இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு 5 முன்னாள் வீராங்கனைகள் விண்ணப்பம்
x
தினத்தந்தி 30 April 2021 12:18 AM GMT (Updated: 30 April 2021 12:18 AM GMT)

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு 5 முன்னாள் வீராங்கனைகள் விண்ணப்பித்து இருக்கின்றனர்.

புதுடெல்லி, 

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த தமிழகத்தை சேர்ந்த முன்னாள் வீரர் டபிள்யூ.வி.ராமனின் பதவிக்காலம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து தகுதியுள்ளவர்கள் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்து இருந்தது. 

இந்த நிலையில் புதிய பயிற்சியாளர் பதவிக்கு தேர்வு குழு முன்னாள் தலைவரும், வீராங்கனையுமான ஹேமலதா கலா, முன்னாள் வீராங்கனைகள் மமதா மபின், ஜெயா ஷர்மா, சுமன் ஷர்மா, நூஷின் அல் காதீர் ஆகியோர் விண்ணப்பித்து இருக்கின்றனர். 

முன்னாள் பயிற்சியாளர்களான டபிள்யூ.வி.ராமன், ரமேஷ் பவார், துஷோர் அரோத் ஆகியோரும் விண்ணப்பித்துள்ளனர். மதன் லால் தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யும். 2017-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பெண்கள் யாரும் நியமிக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story