கிரிக்கெட்

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் ஜிம்பாப்வே அணி 176 ரன்னில் சுருண்டது + "||" + Zimbabwe were bowled out for 176 in the Test against Pakistan

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் ஜிம்பாப்வே அணி 176 ரன்னில் சுருண்டது

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் ஜிம்பாப்வே அணி 176 ரன்னில் சுருண்டது
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் ஜிம்பாப்வே அணி 176 ரன்னில் சுருண்டது.
ஹராரே, 

பாகிஸ்தான்-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹராரேயில் நேற்று தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் ‘பேட்’ செய்த ஜிம்பாப்வே அணி, பாகிஸ்தான் வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 59.1 ஓவர்களில் 176 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக ராய் கையா 48 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணி தரப்பில் ஷகீன் ஷா அப்ரிடி, ஹசன் அலி தலா 4 விக்கெட் வீழ்த்தினார்கள். பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 30 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 103 ரன்கள் எடுத்தது. இம்ரான் பட் 43 ரன்னுடனும், அபித் அலி 56 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.