கிரிக்கெட்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற வாய்ப்பு? + "||" + UAE likely to host T20 World Cup, BCCI official confirms

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற வாய்ப்பு?

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற வாய்ப்பு?
உலக கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 18 ஆம் தேதி முதல் நவம்பர் 15- ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறையாவிட்டால் டி20 உலகக் கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என பிசிசிஐயைச் சேர்ந்த திரஜ் மல்ஹோத்ரா கூறியுள்ளார். 

வரும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளதால், திட்டமிட்டபடி இந்திய மைதானங்களில் இந்த போட்டிகள் நடத்தப்படுமா? என்ற கேள்விகள் எழுந்தன.

இந்நிலையில் பிபிசிக்கு அளித்த பேட்டியில் பிசிசிஐ  நிர்வாகி திரஜ் மல்ஹோத்ரா  கூறுகையில், 

டி20 உலகக் கோப்பைப் போட்டியின் இயக்குநர்களில் ஒருவராக நான் நியமிக்கப்பட்டுள்ளேன். எனவே போட்டியைத் திட்டமிட்டபடி நடத்த எல்லாவிதமான முயற்சிகளையும் நான் மேற்கொள்வேன். சுகாதார நெருக்கடி காரணமாக இந்தியாவுக்கு வெளியே போட்டிகள் நடத்த நினைத்தால் ஐக்கிய அரபு அமீரகத்தில் தான் போட்டி நடத்தப்படும்” என்றார்.