கிரிக்கெட்

ஐபிஎல் கிரிக்கெட்: 34 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி அபார வெற்றி + "||" + #IPL2021 | Punjab Kings win by 34 runs against Royal Challengers Bangalore

ஐபிஎல் கிரிக்கெட்: 34 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி அபார வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட்: 34 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி அபார வெற்றி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 34 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
அகமதாபாத்,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அகமதாபாத்தில் 26-வது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் நடைபெற்றது. டாஸ் வென்ற விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

தொடக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங் 7 ரன்னில் வெளியேறினார். அடுத்து ஆடிய கெய்ல் ராகுலுடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினார். கெய்ல் 46 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் பூரன் 0, ஹூடா 5, ஷாருக்கான் 0, என அடுத்தடுத்து வெளியேறினார்.
 
இதனையடுத்து ராகுலுடன் ஹர்பிரீத் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினர். இந்த ஜோடி கடைசி ஓவரில் 22 ரன்கள் குவித்தது. ராகுல் 51 பந்துகளில் 91 ரன்களும் ஹர்பிரீத் 17 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இறுதியில், பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணி தரப்பில் ஜேமிசன் 2, சாம்ஸ், சாஹல், அகமது தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. விராட் கோலி, தேவ்தத் படிக்கல் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

பஞ்சாப் அணியினர் சிறப்பாக பந்து வீசியதால் குறிப்பிட்ட இடைவெளியில் பெங்களூரு அணி விக்கெட்டுகள் வீழ்ந்தன. பெங்களூரு அணியில் விராட் கோலி 35 ரன்னும்,  ரஜத் பட்டிதார் 31 ரன்னும், ஹர்ஷல் படேல் 31 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். மற்றவர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை.

இறுதியில், பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இது பஞ்சாப் அணி பெற்ற 3வது வெற்றி.

பஞ்சாப் அணி சார்பில் ஹர்பிரீத் பிரார் 3 விக்கெட்டும், ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். பெங்களூரு அணி பெற்ற 2வது தோல்வி இதுவாகும்.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த இலங்கையும் ஆர்வம் காட்டுவதாக தகவல்
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கொரோனா அச்சத்தால் பாதியிலேயே காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது.
2. வீரர்கள் சிலருக்கு கொரோனா- ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ அறிவிப்பு
2021- ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
3. ஐபிஎல் போட்டிகளை ரத்து செய்யக்கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு
ஐபிஎல் போட்டிகளை ரத்து செய்யக்கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
4. எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை மும்பையில் மட்டுமே நடத்த பிசிசிஐ ஆலோசிப்பதாக தகவல்
கொரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாக ஐ.பி.எல். போட்டி தொடர்ந்து நடைபெறுவதில் சிக்கல் ஏற்படுமா? என்ற அச்சமும் எழுந்துள்ளது.
5. வீரர்கள் இருவருக்கு கொரோனா; இன்றைய ஐபிஎல் போட்டி ஒத்திவைப்பு
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் விளையாடும் வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.