கிரிக்கெட்

குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா: கிரிக்கெட் வீரர் அஸ்வின் மனைவி + "||" + Corona for 10 people in the family: Wife of cricketer Aswin

குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா: கிரிக்கெட் வீரர் அஸ்வின் மனைவி

குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா:  கிரிக்கெட் வீரர் அஸ்வின் மனைவி
4 குழந்தைகள் உள்பட குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என கிரிக்கெட் வீரர் அஸ்வினின் மனைவி தெரிவித்து உள்ளார்.
சென்னை,

ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி வந்த கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ள குடும்பத்தினருக்கு ஆதரவாக இருப்பதற்காக போட்டிகளில் தொடராமல் விலகியுள்ளார்.

இந்த நிலையில், அஸ்வின் மனைவி பிரீத்தி தனது குடும்பத்தில் 4 குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில், உங்கள் அனைவருக்கும் ஹாய் சொல்லி கொள்கிறேன்.  ஒரே வாரத்தில் 6 பெரியவர்கள் மற்றும் 4 குழந்தைகளுக்கு எங்களுடைய குடும்பத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தொற்று மைய புள்ளியாக எங்களுடைய குழந்தைகளிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவியுள்ளது.  வெவ்வேறு வீடுகள் மற்றும் மருத்துவமனைகளில் வைரசுடன் போராடி வருகிறோம்.  3 பெற்றோரில் ஒருவர் வீட்டுக்கு திரும்பியுள்ளனர்.

எனவே, நீங்களும், உங்களது குடும்பத்தினரும் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்வதே இதற்கு எதிராக போராடுவதற்கான சிறந்த வாய்ப்பு என்று தெரிவித்து உள்ளார்.

கொரோனாவுடனான அவரது போராட்டம் பற்றியும் பிரீத்தி பதிவிட்டு உள்ளார்.  தனிமைப்படுத்தும் நோய் என அதனை குறிப்பிட்டு உள்ளார்.  மனநலம் பெறுவதற்கு முன் விரைவில் உடல்நலம் பெற்று விடுவோம் என நான் நினைக்கிறேன்.  எல்லோரும் உடன் இருந்தனர்.  உதவி செய்தனர்.  ஆனாலும், உங்களுடன் ஒருவரும் இல்லாதது போன்று இருக்கும் என அவர் தெரிவித்து உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. மத்திய பிரதேசத்தில் பரவிய டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு
மத்திய பிரதேசத்தில் டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்புக்கு ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
2. பொள்ளாச்சி பகுதியில் 61 பேருக்கு கொரோனா பாதிப்பு
பொள்ளாச்சி பகுதியில் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
3. கேரளாவில் தொற்று பாதிப்பு விகிதம் 10% கீழ் வந்தது
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,499- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்பு மேலும் குறைந்தது
டெல்லியில் கொரோனா தொற்று விகிதம் 0.16 சதவிகிதமாக குறைந்துள்ளது.
5. மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு நேற்றைவிட இன்று சற்று உயர்வு
தலைநகர் மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் 733- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.