கிரிக்கெட்

‘ெடல்லி அணி தனிப்பட்ட வீரரை நம்பி இல்லை’-தவான் + "||" + ‘Delhi team does not rely on individual player’-Dhawan

‘ெடல்லி அணி தனிப்பட்ட வீரரை நம்பி இல்லை’-தவான்

‘ெடல்லி அணி தனிப்பட்ட வீரரை நம்பி இல்லை’-தவான்
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஆமதாபாத்,

ஒரு அணியாக இந்த சீசனில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். 7 ஆட்டங்களில் 5-ல் வெற்றி பெற்று மிகச்சிறந்த நிலையில் இருக்கிறோம். ஒட்டுமொத்த அணியும் நன்றாக ஆடுவது நல்ல விஷயமாகும். நாங்கள் குறிப்பிட்ட எந்த வீரரையும் சார்ந்து இருக்கவில்லை. அதே சமயம் எப்போதும் யாராவது ஒருவர் பொறுப்புடன் விளையாடி எங்களுக்கு வெற்றியை தேடி தருகிறார்கள். நாங்கள் வலுவான அணியாக உள்ளோம். புள்ளி பட்டியலில் தற்போதைய நிலைமை மகிழ்ச்சி அளிக்கிறது. முந்தைய கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் பிரித்வி ஷா முதல் ஓவரில் 6 பவுண்டரி விளாசியதை பார்க்க அழகாக இருந்தது. இதன்மூலம் அவர் ஆட்டத்தை எளிதாக்கினார்.

அடுத்து பஞ்சாப் அணியை சந்திக்க உள்ளோம். இந்த ஐ.பி.எல்.-ல் நாங்கள் எந்த அணியையும் எளிதாக எடுத்துக்கொள்ளமாட்டோம். ஒவ்வொரு முறை களம் இறங்கும் போதும் எங்களது வியூகத்தை செம்மையாக செயல்படுத்தி, மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதை உறுதி செய்யும் வகையில் ஆட வேண்டும். பஞ்சாப்யை தோற்கடித்து மற்றொரு வெற்றியை பதிவு செய்வதை எதிர்நோக்கி உள்ளோம்.

இவ்வாறு தவான் கூறினார்.