கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு 167 ரன்கள் இலக்கு + "||" + IPL Cricket: Target of 167 runs for Delhi Capitals

ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு 167 ரன்கள் இலக்கு

ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு 167 ரன்கள் இலக்கு
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 166 ரன்கள் எடுத்துள்ளது.
சென்னை,

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இன்றைய 29-வது ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரப்சிம்ரன் சிங் மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர்.

பிரப்சிம்ரன் சிங் 16 பந்துகளில் 12 ரன்களுடன் அவுட் ஆகி நடையை கட்டினார். அடுத்து வந்த கிறிஸ் கெய்ல் 13 ரன்களில் ரபாடா வீசிய பந்தில் போல்ட் ஆனார். டேவிட் மலான் 26 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து போல்ட் ஆகி ஆட்டமிழந்தார். 

ஒருபுறம் விக்கெட்டுகள் விரிசையாக சரிந்தாலும், மறுமுனையில் நிலைத்து நின்று அதிரடி காட்டிய மயங்க் அகர்வால் 8 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 58 பந்துகளில் 99 ரன்கள் எடுத்த மயங்க் அகர்வால், இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 167 ரன்கள் என்ற இலக்கை நோக்கி டெல்லி அணி தற்போது விளையாடி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து டிரென்ட் பவுல்ட் விலகல்?
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஆடிய நியூசிலாந்து வீரர்களில் கேன் வில்லியம்சன் உள்பட 4 பேர் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக வருகிற 11-ந்தேதி டெல்லியில் இருந்து நேரடியாக இங்கிலாந்துக்கு கிளம்புகிறார்கள்.
2. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த விரும்பும் கவுண்டி அணிகள்
பாதியிலேயே தள்ளிவைக்கப்பட்டு உள்ள ஐ.பி.எல். கிரிக்கெட்டில் எஞ்சிய ஆட்டங்களை நடத்த இங்கிலாந்தில் உள்ள கவுண்டி அணிகள் முன்வந்துள்ளன.
3. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற விருத்திமான் சஹா, அமித் மிஸ்ரா கொரோனாவால் பாதிப்பு
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற ஐதராபாத் அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
4. ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பை அணியை சமாளிக்குமா ஐதராபாத்?
5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சிடம் வீழ்ந்தது.
5. ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
ஐதராபாத் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.