கிரிக்கெட்

இந்தியாவுக்கு ரூ.29 லட்சம் நிதி உதவி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரியம் + "||" + Covid-19: Cricket Australia donates $50,000 to help India fight pandemic

இந்தியாவுக்கு ரூ.29 லட்சம் நிதி உதவி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரியம்

இந்தியாவுக்கு ரூ.29 லட்சம் நிதி உதவி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரியம்
கொரோனா பாதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு சர்வதேச நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன.
மெல்போர்ன்,

இந்தியாவின் கொரோனா நிவாரணப் பணிகளுக்காகக் கிட்டத்தட்ட ரூ. 29 லட்சத்தை நிதி உதவியாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அளித்துள்ளது.  இந்தத் தொகை யுனிசெஃப் ஆஸ்திரேலியா அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கொரோனா நிவாரணப் பணிகளுக்கு அத்தொகை செலவிடப்படும் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 

“ இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் கிரிக்கெட் உள்பட பல்வேறு விவகாரங்களில் பரஸ்பர பிணைப்பை கொண்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலையால்  ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளது எங்களுக்கு கடும் வேதனையை அளித்தது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு: கொளத்தூர் தொகுதி தேர்தல் அலுவலர் மாற்றம்
கொரோனா பாதிப்பு காரணமாக கொளத்தூர் தொகுதி தேர்தல் அலுவலர் மாற்றப்பட்டுள்ளார்.
2. குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா: கிரிக்கெட் வீரர் அஸ்வின் மனைவி
4 குழந்தைகள் உள்பட குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என கிரிக்கெட் வீரர் அஸ்வினின் மனைவி தெரிவித்து உள்ளார்.
3. இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 4.01 லட்சம் பதிவு
இந்தியாவில் ஒரே நாளில் 4.01 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.
4. பீகார் தலைமை செயலாளர் கொரோனா பாதிப்புக்கு பலி
பீகார் தலைமை செயலாளர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்து உள்ளார்.
5. இந்தியாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி காலமானார்
இந்தியாவின் மூத்த வழக்கறிஞர் மற்றும் முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி கொரோனா பாதிப்பினால் இன்று காலமானார்.