கிரிக்கெட்

வீரர்கள் இருவருக்கு கொரோனா; இன்றைய ஐபிஎல் போட்டி ஒத்திவைப்பு + "||" + IPL 2021: Varun, Sandeep test positive for COVID-19, RCB wary of playing KKR on Monday night

வீரர்கள் இருவருக்கு கொரோனா; இன்றைய ஐபிஎல் போட்டி ஒத்திவைப்பு

வீரர்கள் இருவருக்கு கொரோனா;  இன்றைய ஐபிஎல் போட்டி ஒத்திவைப்பு
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் விளையாடும் வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.  ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோத உள்ளன. இந்த நிலையில், கொல்கத்தா அணியில் விளையாடும் தமிழக வீரரான வருண் சக்ரவர்த்தி மற்றும் கேரளாவை சேர்ந்த  சந்தீப் வாரியர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.  

கொல்கத்தா அணி வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் இன்று நடைபெறும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டம் ஒத்திவைக்கப்பட இருப்பதாக பிசிசிஐ அதிகாரி கூறியதாக ஏ.என்.ஐ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.  எனினும், இதுபற்றி பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை.

ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்கள் கடுமையான பயோ பாதுகாப்பு வளையத்தில் உள்ளனர். இதையும் மீறி வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா சூழலில் பதவி ஏற்பு முக்கியமில்லை; புதுச்சேரி பா.ஜ.க. சட்டமன்ற கட்சி தலைவர் நமச்சிவாயம் பேட்டி
கொரோனா சூழலில் பதவி ஏற்பு முக்கியமில்லை என்று பா.ஜ.க. சட்டமன்ற கட்சி தலைவர் நமச்சிவாயம் கூறினார்.
2. திருவள்ளூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிப்பு: கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 1,410 பேர் பாதிப்பு 14 பேர் பலி
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நேற்று 1,410 பேர் பாதிக்கப்பட்டனர்.
3. இந்தியாவில் புதிதாக 3,26,098 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 3,890 பேர் பலி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,26,098 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கண்ணுக்கு தெரியாத எதிரியான கொரோனாவை எதிர்த்து முழு பலத்துடன் அரசு போராடுகிறது - பிரதமர் மோடி
கண்ணுக்கு தெரியாத எதிரியான கொரோனாவை எதிர்த்து முழு பலத்துடன் அரசு போராடுகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.
5. உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 14.14 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16.25 கோடியை தாண்டியுள்ளது.