ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் நியூசிலாந்து அணி முதலிடத்துக்கு முன்னேற்றம்


ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் நியூசிலாந்து அணி முதலிடத்துக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 3 May 2021 9:48 PM GMT (Updated: 3 May 2021 9:48 PM GMT)

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் தொடக்கத்தில் கடைசி 3 ஆண்டுகளில் அணிகளின் செயல்பாடு அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படுகிறது.

 இதன்படி ஒருநாள் போட்டி தரவரிசையில் நியூசிலாந்து அணி (121 புள்ளி) 3-வது இடத்தில் இருந்து முதலிடத்துக்கு முன்னேறி இருக்கிறது. முதலிடத்தில் இருந்த இங்கிலாந்து அணி (115 புள்ளி) 4-வது இடத்துக்கு பின்தங்கி இருக்கிறது. ஆஸ்திரேலிய அணி (118 புள்ளி) 2 இடம் ஏற்றம் கண்டு 2-வது இடத்தை பிடித்துள்ளது. இந்திய அணி (115 புள்ளி) ஒரு இடம் சரிந்து 3-வது இடம் பெற்றுள்ளது. தென்ஆப்பிரிக்க அணி (107 புள்ளி) 5-வது இடத்தில் நீடிக்கிறது.

20 ஓவர் போட்டி தரவரிசையில் இங்கிலாந்து அணி (277 புள்ளி) முதலிடத்தில் தொடருகிறது. இந்திய அணி (272 புள்ளி) 2-வது இடத்தில் உள்ளது. நியூசிலாந்து அணி (263 புள்ளி) 5-வது இடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு உயர்ந்துள்ளது. பாகிஸ்தான அணி (261 புள்ளி) ஒரு இடம் சரிந்து 4-வது இடத்தையும், ஆஸ்திரேலிய அணி (258 புள்ளி) ஒரு இடம் சறுக்கி 5-வது இடத்தையும் பெற்றுள்ளன.


Next Story