கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இலங்கை வீரர் திசரா பெரேரா ஓய்வு + "||" + Sri Lankan cricketer Thisara Perera retires from international cricket

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இலங்கை வீரர் திசரா பெரேரா ஓய்வு

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இலங்கை வீரர் திசரா பெரேரா ஓய்வு
இலங்கை கிரிக்கெட் அணியின் சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவரான திசரா பெரேரா டெஸ்ட் போட்டியில் இருந்து ஏற்கனவே விடைபெற்று விட்டாலும் ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வந்தார்.

திசரா பெரேரா 6 டெஸ்ட், 166 ஒருநாள் மற்றும் 84 இருபது ஓவர் போட்டியில் இலங்கை அணிக்காக விளையாடி இருக்கிறார். 3 ஒருநாள் மற்றும் 9 இருபது ஓவர் போட்டிகளுக்கு இலங்கை அணியின் கேப்டனாகவும் இருந்து இருக்கிறார். 2014-ம் ஆண்டில் 20 ஓவர் உலக கோப்பை வென்ற இலங்கை அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். கடந்த மார்ச் மாதம் இலங்கையில் நடந்த ‘லிஸ்ட் ஏ’ வகை போட்டியில் ஒரு ஒவரில் 6 பந்துகளையும் சிக்சருக்கு தூக்கி அசத்தி சாதனை படைத்தார். இந்த நிலையில் 32 வயதான திசரா பெரேரா சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.