கிரிக்கெட்

சிஎஸ்கே அணி தனிமைப்படுத்தப்பட்டது: நாளை நடைபெற உள்ள போட்டி ஒத்திவைக்கப்படும் எனத்தகவல் + "||" + Chennai Super Kings Team In Isolation, Wednesday's Match vs Rajasthan Royals To Be Rescheduled: Sources

சிஎஸ்கே அணி தனிமைப்படுத்தப்பட்டது: நாளை நடைபெற உள்ள போட்டி ஒத்திவைக்கப்படும் எனத்தகவல்

சிஎஸ்கே அணி தனிமைப்படுத்தப்பட்டது: நாளை நடைபெற உள்ள போட்டி ஒத்திவைக்கப்படும் எனத்தகவல்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி,

ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள வீரர்களையும் கொரோனா வைரஸ் பாதிக்கத் தொடங்கியுள்ளது. கடுமையான பயோ பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் வீரர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பது ஐபிஎல் நிர்வாகத்தை கவலை அடையச்செய்துள்ளது.   

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர் இருவருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, நேற்று நடக்க இருந்த கொல்கத்தா, ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில்,  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர்  பாலாஜிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து, ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியும் கடுமையான தனிமைப்படுத்தும் முகாமுக்குச் சென்றுள்ளனர்.

இதனால் நாளை நடக்கும் சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம்  ஒத்திவைக்கப்பட உள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகின்றன. எனினும் மேற்கூறிய இரு ஆட்டங்களும் எப்போது நடத்தப்படும் என்பது குறித்து இதுவரை அறிவிக்கவில்லை. டெல்லியில் இன்று மும்பை இந்தியன்ஸ், சன்ரைரஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் வழக்கம் போல் நடக்கும்.

தொடர்புடைய செய்திகள்

1. மத்திய கிழக்கு நாடுகளில் 4-வது அலை அச்சுறுத்தல்- உலக சுகாதார அமைப்பு
டெல்டா வகை கொரோனா பரவல் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் 4-வது அலை ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
2. 3-வது அலை அச்சுறுத்தல்; தென் ஆப்பிரிக்காவில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்
தென் ஆப்பிரிக்காவில் டெல்டா வகை கொரோனா பரவியுள்ளது. அந்நாட்டில் 5 பேர் புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
3. கொரோனா அச்சுறுத்தல்: இந்திய பயணிகளுக்கு தடை விதித்தது சூடான்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்திய பயணிகளுக்கு சூடான் தடை விதித்துள்ளது.
4. கொரோனா அச்சுறுத்தல்: பஞ்சாபில் மேலும் 10 நாட்களுக்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு
கொரோனா அச்சுறுத்தல் குறையாததால் பஞ்சாபில் மேலும் 10 நாட்களுக்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.