கிரிக்கெட்

வீரர்கள் சிலருக்கு கொரோனா- ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ அறிவிப்பு + "||" + IPL suspended for this season: Vice-President BCCI Rajeev Shukla to ANI

வீரர்கள் சிலருக்கு கொரோனா- ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ அறிவிப்பு

வீரர்கள் சிலருக்கு கொரோனா- ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ அறிவிப்பு
2021- ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
புதுடெல்லி,

ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள வீரர்களையும் கொரோனா வைரஸ் பாதிக்கத் தொடங்கியுள்ளது. கடுமையான பயோ பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் வீரர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பது ஐபிஎல் நிர்வாகத்தை கவலை அடையச்செய்துள்ளது.   

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, நேற்று நடக்க இருந்த கொல்கத்தா, ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில்,  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர்  பாலாஜிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து, ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியும் கடுமையான தனிமைப்படுத்தும் முகாமுக்குச் சென்றுள்ளனர்.

அதேபோல், சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் சஹா மற்றும் டெல்லி அணியின் அமித்மிஸ்ராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டியில் பங்கேற்றுள்ள வீரர்கள் அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐபிஎல் தொடர் நிறுத்தம் செய்யப்படுவதாக  பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா அறிவித்துள்ளார். இந்தத் தகவலை ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. டி20 கிரிக்கெட்டில் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனை படைத்தார் பும்ரா...!
டி20 கிரிக்கெட் போட்டிகளில் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பும்ரா பெற்றார்.
2. ஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தாவுக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு
டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
3. ஐபிஎல்: ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு பேட்டிங் தேர்வு
ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
4. ஐபிஎல் கிரிக்கெட்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங் தேர்வு
டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
5. ஐபிஎல்: குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு முதலில் பேட்டிங்
குஜராத் டைடன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.