நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் காயம்


நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் காயம்
x
தினத்தந்தி 4 May 2021 11:12 PM GMT (Updated: 2021-05-05T04:42:31+05:30)

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் 37 வயதான ராஸ் டெய்லர் பயிற்சி முகாமின் போது காயத்தில் சிக்கினார்.

அவரது இடது பின்னங்காலில் தசைநாரில் கிழிவு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் பயிற்சியை விட்டு பாதியிலேயே தடுமாற்றத்துடன் வெளியேறினார்.இதனால் அடுத்த மாதம் தொடக்கத்தில் இங்கிலாந்தில் நடக்க உள்ள 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் அவர் ஆடுவாரா? என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவர் தொடர்ந்து அணியுடன் இருந்து பயிற்சி முறைகளை மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 2-ந்தேதி லண்டன் லார்ட்சில் தொடங்குகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் நியூசிலாந்து அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இ்ந்தியாவுடன் மோத இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story