கிரிக்கெட்

‘ஐ.பி.எல். போட்டியை அமீரகத்தில் நடத்தியிருக்க வேண்டும்’; இந்திய முன்னாள் வீரர் காவ்ரி + "||" + ‘IPL match should have been held in UAE’; Former Indian cricketer Kawri

‘ஐ.பி.எல். போட்டியை அமீரகத்தில் நடத்தியிருக்க வேண்டும்’; இந்திய முன்னாள் வீரர் காவ்ரி

‘ஐ.பி.எல். போட்டியை அமீரகத்தில் நடத்தியிருக்க வேண்டும்’; இந்திய முன்னாள் வீரர் காவ்ரி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் கர்சன் காவ்ரி அளித்த ஒரு பேட்டியில், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தியிருக்க வேண்டுமே தவிர, இந்தியாவில் அல்ல என்றார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் கர்சன் காவ்ரி நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘இந்தியாவில் ஓராண்டுக்கு மேலாக கொரோனா பாதிப்பு உள்ளது. எனவே 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்திலோ அல்லது வேறு நாட்டிலோ நடத்தியிருக்க வேண்டுமே தவிர, இந்தியாவில் அல்ல. இந்தியாவில் தற்போதைய நிலைமை மோசமாக உள்ளது. இந்த ஆண்டு இந்தியாவில் ஐ.பி.எல். போட்டியை நடத்தியிருக்கக்கூடாது. கடந்த ஆண்டை போலவே அமீரகத்தில் போட்டியை நடத்தும் முடிவை எடுத்திருக்க வேண்டும்’ என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல். போட்டி நடந்த மைதானத்தில் சூதாட்டம்; 8 பேர் கைது
நவிமும்பை டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன.
2. ஐ.பி.எல். போட்டிகளுக்கு பயங்கரவாத மிரட்டல்? - மும்பை போலீசார் விளக்கம்
ஐ.பி.எல். போட்டிகளுக்கு பயங்கரவாத மிரட்டல் வந்ததாக வெளியான தகவல்களுக்கு மும்பை போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.