கொரோனாவால் பாதித்தவர்களுக்கு இர்பான் பதான் உதவி


கொரோனாவால் பாதித்தவர்களுக்கு இர்பான் பதான் உதவி
x
தினத்தந்தி 6 May 2021 1:30 AM GMT (Updated: 2021-05-06T07:00:43+05:30)

கொரோனா 2-வது அலை காரணமாக நாடு முழுவதும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக டெல்லி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தெற்கு டெல்லியில் கொரோனாவால் பாதித்த மக்களுக்கு தனது கிரிக்கெட் அகாடமி சார்பில் தினசரி இலவசமாக உணவு வழங்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டரான 36 வயது இர்பான் பதான் நேற்று அறிவித்தார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் ‘தற்போது கொரோனாவின் 2-வது அலையின் தாக்கத்துக்கு மத்தியில் நமது நாடு இருக்கிறது. இந்த தருணத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து தேவைப்படும் மக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வது கடமையாகும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


Next Story