ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த விரும்பும் கவுண்டி அணிகள்


ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த விரும்பும் கவுண்டி அணிகள்
x
தினத்தந்தி 7 May 2021 1:24 AM GMT (Updated: 7 May 2021 1:24 AM GMT)

பாதியிலேயே தள்ளிவைக்கப்பட்டு உள்ள ஐ.பி.எல். கிரிக்கெட்டில் எஞ்சிய ஆட்டங்களை நடத்த இங்கிலாந்தில் உள்ள கவுண்டி அணிகள் முன்வந்துள்ளன.

 எம்.சி.சி. சர்ரே, வார்விக்‌ஷைர், லங்காஷைர் ஆகிய கவுண்டி அணி நிர்வாகங்கள் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் எழுதியுள்ளன. அதில் ஐ.பி.எல். போட்டியை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அழைப்பு விடுக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளன. செப்டம்பர் மாதத்தின் பிற்பகுதியில் 2 வாரத்திற்குள் போட்டியை நடத்தி முடிக்கலாம் என்றும், ரசிகர்கள் கூட வர வாய்ப்புள்ளது என்றும் கவுண்டி நிர்வாகங்கள் கூறியுள்ளன. ஆனால் இதில் நடைமுறை சிக்கல் நிறைய உள்ளன. குறிப்பாக இந்திய அணியின் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 14-ந்தேதி நிறைவடைகிறது. அதன் பிறகு இங்கிலாந்து அணி, வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தானுக்கு சென்று குறுகிய வடிவிலான போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளது. மற்ற சர்வதேச அணிகளுக்கும் அந்த சமயத்தில் போட்டிகள் உள்ளன. அத்துடன் கொரோனா தனிமைப்படுத்துதல் நடைமுறை வேறு இருக்கிறது. என்றாலும் ஐ.பி.எல். போட்டிக்கு ஏற்ப சில மாற்றங்களை செய்து 2 வாரத்தில் போட்டியை நடத்தும் வாய்ப்பை உருவாக்க முடியும் என்று கவுண்டி அணிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.


Next Story