கிரிக்கெட்

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து டிரென்ட் பவுல்ட் விலகல்? + "||" + Trent Boult departure from the England Test series?

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து டிரென்ட் பவுல்ட் விலகல்?

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து டிரென்ட் பவுல்ட் விலகல்?
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஆடிய நியூசிலாந்து வீரர்களில் கேன் வில்லியம்சன் உள்பட 4 பேர் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக வருகிற 11-ந்தேதி டெல்லியில் இருந்து நேரடியாக இங்கிலாந்துக்கு கிளம்புகிறார்கள்.

மற்ற நியூசிலாந்து வீரர்கள் இன்று தாயகம் புறப்படுகிறார்கள். மும்பை அணிக்காக ஆடிய நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் சொந்த நாட்டில் 2 வாரம் தனிமைப்படுத்துதலை முடித்து குடும்பத்தினருடன் ஒரு வாரம் தங்கியிருக்க நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது. இதனால் அடுத்த மாதம் 2-ந்தேதி லண்டன் லார்ட்சில் தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் அவர் விளையாடமாட்டார் என்று தெரிகிறது. ஆனால் சவுத்தம்டனில் ஜூன் 18-ந்தேதி தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் அவர் நிச்சயம் ஆடுவார் என்று நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. எங்கள் வீரர்கள் ஆடிய விதம் நம்பிக்கையை அளிக்கிறது- கேன் வில்லியம்சன்
கிட்டத்தட்ட தோல்வியின் விளிம்பில் இருந்து மீண்டு வந்தோம்.
2. ஐபிஎல் 2021- சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு?
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தாவை தோற்கடித்து 4-வது முறையாக சாம்பியன் கோப்பையை உச்சிமுகர்ந்தது.
3. ஐ.பி.எல். கிரிக்கெட்; 4-வது முறையாக கோப்பையை வென்றது சென்னை
ஐ.பி.எல். இறுதி போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி 4-வது முறையாக சென்னை அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது.
4. ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது கொல்கத்தா
இன்று நடைபெற்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
5. ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணிக்கு 173 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது டெல்லி
டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் குவித்துள்ளது.