கிரிக்கெட்

உலக சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்து தொடருக்கான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி அறிவிப்பு + "||" + Announcement of the Indian Test cricket team for the World Championship and England series

உலக சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்து தொடருக்கான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி அறிவிப்பு

உலக சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்து தொடருக்கான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி அறிவிப்பு
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி சுற்று மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

ஜடேஜா, ஷமி திரும்பிய நிலையில், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் நீக்கப்பட்டனர்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டி

முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டன் நகரில் அடுத்த மாதம் (ஜூன்) 18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடக்கிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் நிறைவடைந்ததும் இந்திய அணி இங்கிலாந்திலேயே தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் நாட்டிங்காமில் ஆகஸ்டு 4-ந்தேதி தொடங்குகிறது. எஞ்சிய டெஸ்ட் போட்டிகள் லண்டன் லார்ட்ஸ் (ஆக.12-16), லீட்ஸ் (ஆக.25-29), லண்டன் ஓவல் (செப்.2-6), மான்செஸ்டர் (செப்.10-14) ஆகிய இடங்களில் நடக்கிறது. இவ்விரு டெஸ்ட் தொடர்களுக்கான 20 பேர் கொண்ட இந்திய அணியின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. தேர்வு கமிட்டியினர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்து ஆலோசித்து அணியை தேர்வு செய்து அறிவித்தனர்.

பாண்ட்யா - குல்தீப்

இதன்படி ஆச்சரியம் அளிக்கும் வகையில் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு இடம் கிடைக்கவில்லை. 2018-ம் ஆண்டில் இருந்து முதுகுவலி பிரச்சினையால் அவ்வப்போது அவதிப்படும் ஹர்திக் பாண்ட்யா இன்னும் பந்து வீசுவதற்கு முழுமையாக தயாராகவில்லை. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக 7 ஆட்டங்களில் விளையாடியும் ஒரு ஆட்டத்தில் கூட பவுலிங் செய்யவில்லை. இதனால் தான் அவர் கழற்றி விடப்பட்டு உள்ளார். இதே போல் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், காயத்தால் ஓய்வில் இருக்கும் தமிழக வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன், மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர்.

ஐ.பி.எல். போட்டியில் கலக்கிய பிரித்வி ஷா, தேவ்தத் படிக்கல் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்களது பெயர் பரிசீலிக்கப்படவில்லை. இதே போல் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமாருக்கும் இடம் கிட்டவில்லை.

ஜடேஜா- ஷமி

அதே சமயம் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் போது காயமடைந்து உள்நாட்டில் நடந்த இங்கிலாந்து தொடரை தவற விட்ட வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, ேபட்ஸ்மேன் ஹனுமா விஹாரி ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர். சுழற்பந்து வீச்சாளர்கள் அக்‌ஷர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் இடத்தை தக்க வைத்துக் கொண்டனர். குடல்வால் அறுவை சிகிச்சை செய்துள்ள லோகேஷ் ராகுல், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மூத்த விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா இருவரும் அணிக்கு தேர்வாகி இருந்தாலும் உடல்தகுதியை எட்டுவதை பொறுத்தே அவர்கள் அணியில் நீடிப்பது குறித்து முடிவு செய்யப்படும்.

தனிமைப்படுத்தும் நடைமுறை இருப்பதால் இந்திய அணியினர் ஜூன் 2-ந்தேதி இங்கிலாந்துக்கு புறப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அணி பட்டியல்

இந்திய டெஸ்ட் அணி வருமாறு:-

விராட் கோலி (கேப்டன்), அஜிங்யா ரஹானே (துணை கேப்டன்), ரோகித் சா்மா, சுப்மான் கில், மயங்க் அகர்வால், புஜாரா, ஹனுமா விஹாரி, ரிஷாப் பண்ட், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ், லோகேஷ் ராகுல், விருத்திமான் சஹா.

மாற்று வீரர்கள்: அபிமன்யு ஈஸ்வரன், பிரசித் கிருஷ்ணா, அவேஷ்கான், அர்ஜான் நவாஸ்வாலா.


தொடர்புடைய செய்திகள்

1. சிட்னி டெஸ்ட்: பரபரப்பான போட்டியை போராடி "டிரா" செய்த இங்கிலாந்து
5-ஆம் நாளின் கடைசி பந்து வரை ஆட்டம் பரபரப்பாக சென்றது.
2. சிட்னி டெஸ்ட்: இங்கிலாந்து அணிக்கு 388 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா
இரண்டாம் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
3. ஆஷஸ் டெஸ்ட்: ஜானி பேர்ஸ்டோ சதத்தால் சரிவில் இருந்து மீண்ட இங்கிலாந்து
மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்துள்ளது.
5. ஒமைக்ரான் பரவல்: இங்கிலாந்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரம்
ஒமைக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கையாக இங்கிலாந்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.