கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த இலங்கையும் ஆர்வம் காட்டுவதாக தகவல் + "||" + Grounds Will Be Ready": Sri Lanka Cricket Offers To Host Remaining IPL 2021 In September

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த இலங்கையும் ஆர்வம் காட்டுவதாக தகவல்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த  இலங்கையும் ஆர்வம் காட்டுவதாக தகவல்
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கொரோனா அச்சத்தால் பாதியிலேயே காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது.
கொழும்பு,

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கொரோனா அச்சத்தால் பாதியிலேயே காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது. வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்), விருத்திமான் சஹா (ஐதராபாத் சன்ரைசர்ஸ்), பயிற்சியாளர்கள் எல்.பாலாஜி, மைக் ஹஸ்சி (சென்னை சூப்பர் கிங்ஸ்), அமித் மிஸ்ரா (டெல்லி கேப்பிட்டல்ஸ்) ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.  4 அணிக்குள் கொரோனா ஊடுருவியதால் வேறு வழியின்றி ஐ.பி.எல். போட்டியை ஒத்திவைக்க வேண்டியதாகி விட்டது.

பாதியிலேயே தள்ளிவைக்கப்பட்டு உள்ள ஐ.பி.எல். கிரிக்கெட்டில் எஞ்சிய ஆட்டங்களை நடத்த இங்கிலாந்தில் உள்ள கவுண்டி அணிகள் முன்வந்துள்ளன. எம்.சி.சி. சர்ரே, வார்விக்‌ஷைர், லங்காஷைர் ஆகிய கவுண்டி அணி நிர்வாகங்கள் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் எழுதியுள்ளன. அதில் ஐ.பி.எல். போட்டியை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அழைப்பு விடுக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளன. செப்டம்பர் மாதத்தின் பிற்பகுதியில் 2 வாரத்திற்குள் போட்டியை நடத்தி முடிக்கலாம் என்றும், ரசிகர்கள் கூட வர வாய்ப்புள்ளது என்றும் கவுண்டி நிர்வாகங்கள் கூறியுள்ளன. 

இந்த நிலையில், இந்தியாவின்  அண்டை நாடான இலங்கையும் ஐபிஎல்- தொடரின் எஞ்சிய ஆட்டங்களை நடத்த ஆர்வம் காட்டியிருக்கிறது.  செப்டம்பர் மாதத்தில் ஐபிஎல் போட்டிகளுக்காக இடம் அளிக்க தயார் என்று இலங்கை கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் கூறியதாக பிரபல ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டிகளை நடத்துவதற்கே இந்திய கிரிக்கெட் வாரியம் அதிக ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


தொடர்புடைய செய்திகள்

1. ஐபிஎல் கோப்பை யாருக்கு? இறுதிப்போட்டியில் சென்னை- கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை
14-வது ஐபிஎல் தொடரில் எந்த அணி கோப்பையை உச்சிமுகரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
2. ஐபிஎல் 2-வது தகுதி சுற்று: கொல்கத்தாவுக்கு 136 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம்
கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 135 ரன்கள் சேர்த்துள்ளது.
3. ஐபிஎல் 2-வது தகுதி சுற்று ஆட்டம்: கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சு
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.
4. ஐ.பி.எல்: வெளியேற்றுதல் சுற்று ஆட்டம்- பெங்களூரு அணி முதலில் பேட்டிங்
ஐபிஎல் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.
5. இது போன்ற வெற்றி எங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது - விராட் கோலி
எந்த சூழ்நிலையிலும் போட்டியை எங்கள் பக்கம் திரும்பலாம் என்ற நம்பிக்கையை இது போன்ற வெற்றி அளிப்பதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.