விராட் கோலியின் நிதி திரட்டும் அமைப்புக்கு ஒரே நாளில் ரூ.3½ கோடி வசூல்


விராட் கோலியின் நிதி திரட்டும் அமைப்புக்கு ஒரே நாளில் ரூ.3½ கோடி வசூல்
x
தினத்தந்தி 9 May 2021 1:18 AM GMT (Updated: 2021-05-09T06:48:12+05:30)

கொரோனாவில் பாதித்தவர்களுக்கு உதவிடும்வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும், அவரது மனைவியும், இந்தி நடிகையுமான அனுஷ்கா சர்மாவும் ‘கெட்டோ’ என்ற தொண்டு நிறுவனத்துடன் இணைந்து ஆன் லைன் மூலம் ரூ.7 கோடி நிதி திரட்டி அளிக்க முடிவு செய்தனர்.

முதற்கட்டமாக ரூ.2 கோடியை அவர்கள் நன்கொடையாக வழங்கினர். மற்றவர்களும் கொரோனா நிவாரண பணிகளுக்கு நிதி வழங்கும்படி வேண்டுகோள் விடுத்தனர்.

இந்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் ரூ.3 கோடியே 60 லட்சம் நிதி வசூல் ஆகி உள்ளதாக விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ‘நிதி திரட்டும் முயற்சிக்கு கிடைத்துள்ள பெரிய அளவிலான ஆதரவு எங்களை திகைக்க வைக்கிறது. நமது இலக்கை எட்ட தொடர்ந்து போராடுவோம். தேசத்துக்கு உதவிடுவோம’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Next Story