ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி டெஸ்ட்: பாகிஸ்தான் அணி 510 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’; அபித் அலி இரட்டை சதம் அடித்தார்


ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி டெஸ்ட்: பாகிஸ்தான் அணி 510 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’; அபித் அலி இரட்டை சதம் அடித்தார்
x
தினத்தந்தி 9 May 2021 5:33 AM GMT (Updated: 9 May 2021 5:33 AM GMT)

பாகிஸ்தான்-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹராரேயில் நடந்து வருகிறது.

இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் எடுத்து இருந்தது. அபித் அலி 118 ரன்னுடனும், சஜித் கான் ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிைலயில் 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 147.1 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 510 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. முதலாவது இரட்டை சதம் அடித்த அபித் அலி 407 பந்துகளில் 29 பவுண்டரியுடன் 215 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். அதிரடி காட்டிய நமன் அலி 97 ரன்னில் (104 பந்து, 9 பவுண்டரி, 5 சிக்சர்) ஆட்டம் இழந்தார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஜிம்பாப்வே அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் எடுத்துள்ளது. இன்று 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது.


Next Story