சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் 450 ஆக்சிஜன் செறிவூட்டி; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது


சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் 450 ஆக்சிஜன் செறிவூட்டி; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது
x
தினத்தந்தி 9 May 2021 6:09 AM GMT (Updated: 2021-05-09T11:39:42+05:30)

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிசிக்சை பெறுவோருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ஆதரவுகரம் நீட்டியுள்ளது.

கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அதிகமாக தேவைப்படுவதால் அதை கருத்தில் கொண்டு 450 ஆக்சிஜன் செறிவூட்டி எந்திரங்களை வழங்க சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் சார்பில் அதன் இயக்குனர் ஆர்.சீனிவாசன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ரூபா குருநாத், இந்தியா சிமெண்ட்ஸ் அதிகாரி பி.எஸ்.ராஜன் ஆகியோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆக்சிஜன் செறிவூட்டியை வழங்கினர்.

Next Story