கிரிக்கெட்

மாலத்தீவுகள் பாரில் டேவிட் வார்னர் - மைக்கேல் ஸ்லேடர் இடையே மோதலா? + "||" + IPL 2021: David Warner, Michael Slater Deny Reports Of Fight In Maldives Bar

மாலத்தீவுகள் பாரில் டேவிட் வார்னர் - மைக்கேல் ஸ்லேடர் இடையே மோதலா?

மாலத்தீவுகள் பாரில்  டேவிட் வார்னர் - மைக்கேல் ஸ்லேடர் இடையே  மோதலா?
ஐபிஎல் தொடரில் விளையாடிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் மாலத்தீவுகள் நாட்டில் தங்கியுள்ளனர்.
கொரோனா பாதிப்பு காரணமாக ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஐபிஎல் தொடரில் விளையாடிய ஆஸ்திரேலிய வீரர்கள் மாலத்தீவு சென்றுள்ளனர். அங்கிருந்து ஆஸ்திரேலியா அழைத்துச்செல்லப்பட உள்ளனர்.  

இந்த நிலையில், மாலத்தீவில் உள்ள பார் ஒன்றில் சன்ரைசர்ஸ் அணியின் முன்னணி வீரரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரருமான டேவிட் வார்னர்  மற்றும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும் வர்ணணையாளருமான மைக்கேல் ஸ்லேடர்  இடையே மோதல் நடைபெற்றதாக ஆஸ்திரேலிய ஊடகங்களில் செய்தி வெளியானது. இருவரும் கைகலைப்பிலும் ஈடுபட்டதாக அந்த செய்தியில் கூறப்பட்டது. 

ஆனால், இந்த தகவலை சம்பந்தப்பட்ட இருவருமே மறுத்துள்ளனர். நாங்கள் இருவருமே நல்ல நண்பர்கள் எனவே அப்படி நடக்க வாய்ப்பே இல்லை என இருவருமே மறுப்பு தெரிவித்ததாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


தொடர்புடைய செய்திகள்

1. இங்.வீரர்கள் ஒன்று சேர்ந்தால் ஐபிஎல் போட்டியில் விளையாடலாம்; கெவின் பீட்டர்சன்
இங்கிலாந்து அணியின் மிகச்சிறந்த வீர்கள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து நின்றால் ஐபிஎல் தொடரில் விளையாட முடியும் என பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
2. ஐபிஎல் முடிந்த பிறகு வீரர்களுக்காக தனி விமானம் இயக்க வேண்டும்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிறிஸ் லின் வேண்டுகோள்
ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு தனி விமானத்தில் ஆஸ்திரேலிய திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிறிஸ் லின் அறிவுறுத்தியுள்ளார்.
3. ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை அணி வீரர் ஜோஷ் ஹேசில்வுட் விலகல்
நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஜோஷ் ஹேசில்வுட் விலகியுள்ளார்.
4. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஏப்.9 ஆம் தேதி சென்னையில் தொடங்கும்: பிசிசிஐ
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஏப்.9 ஆம் தேதி சென்னையில் தொடங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.