கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் + "||" + India Captain Virat Kohli Gets Vaccinated Against Coronavirus

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கொரோனா  தடுப்பூசி போட்டுக்கொண்டார்
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பக்கத்தில் பகிர்ந்துள்ள விராட் கோலி, அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.  

ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்ட பிறகு, வீடு திரும்பிய விராட் கோலி கொரோனா வைரஸ் எதிரான பணிகளில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்தியுள்ளார். 

தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து விராட் கோலி கொரோனா நிவாரண நிதி திரட்டினார்.  முதற்கட்டமாக ரூ.2 கோடியை அவர்கள் நன்கொடையாக வழங்கினர். மற்றவர்களும் கொரோனா நிவாரண பணிகளுக்கு நிதி வழங்கும்படி வேண்டுகோள் விடுத்தனர்.

இந்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் ரூ.3 கோடியே 60 லட்சம் நிதி வசூல் ஆகி உள்ளதாக விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில்  அண்மையில்  தெரிவித்து இருந்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் இன்று 3,320 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டிய மாநிலத்தில் இன்று 3,320 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
2. தலைநகர் டெல்லியில் இன்று கொரோனா உயிரிழப்பு இல்லை...
தலைநகர் டெல்லியில் இன்று 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. தமிழ்நாட்டில் இன்று 1,745 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழ்நாட்டில் இன்று 1,745 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கேரளாவில் இன்று 19,682 பேருக்கு கொரோனா - 152 பேர் பலி
கேரளாவில் இன்று 19,682 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கர்நாடகாவில் மேலும் 847 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 847 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.