கிரிக்கெட்

ஏப்ரல் மாதத்துக்கான ஐ.சி.சி.யின் சிறந்த வீரர் விருதுக்கு பாபர் அசாம் தேர்வு + "||" + For the month of April For the ICC Player of the Year award Babur Assam Selection

ஏப்ரல் மாதத்துக்கான ஐ.சி.சி.யின் சிறந்த வீரர் விருதுக்கு பாபர் அசாம் தேர்வு

ஏப்ரல் மாதத்துக்கான ஐ.சி.சி.யின் சிறந்த வீரர் விருதுக்கு பாபர் அசாம் தேர்வு
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் (ஐ.சி.சி.) மாதந்தோறும் சிறந்த வீரர், வீராங்கனை தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறார்கள்.
துபாய், 

ஐ.சி.சி. விருது பட்டியலில் இடம் பெறும் 3 வீரர்கள், வீராங்கனைகளில் இருந்து தலா ஒருவரை முன்னாள் வீரர், பத்திரிகையாளர்கள், ஒளிபரப்பு நிறுவனம் உள்ளிட்ட ஐ.சி.சி. வாக்கு அகாடமியினர் மற்றும் ரசிகர்கள் வாக்களித்து தேர்வு செய்வார்கள். கடந்த மாதத்துக்கான (ஏப்ரல்) சிறந்த வீரராக பாகிஸ்தான் அணியின் கேப்டனும், ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவருமான பாபர் அசாம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் அவருக்கு இந்த விருது கிட்டி இருக்கிறது. சிறந்த வீராங்கனை விருதுக்கு ஆஸ்திரேலிய அணியின் அலிசா ஹீலி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அவர் நியூசிலாந்துக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் 155 ரன்கள் சேர்த்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.