கிரிக்கெட்

கொரோனா பாதிப்பில் இருந்து மீளாத மைக் ஹஸ்சி + "||" + Mike Hussey recovering from corona damage

கொரோனா பாதிப்பில் இருந்து மீளாத மைக் ஹஸ்சி

கொரோனா பாதிப்பில் இருந்து மீளாத மைக் ஹஸ்சி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்சிக்கு மீண்டும் தொற்று இருப்பதை குறிக்கும் ‘பாசிட்டிவ்’ முடிவு வந்துள்ளது.
சென்னை,

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்சி (ஆஸ்திரேலியா) கொரோனாவால் பாதிக்கப்பட்டார். ஐ.பி.எல்.-ல் பங்கேற்ற மற்ற ஆஸ்திரேலிய வீரர்கள் மாலத்தீவுக்கு சென்று அங்கிருந்து தாயகம் திரும்ப தயாராகி வரும் நிலையில், 45 வயதான மைக் ஹஸ்சி மட்டும் சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். சில தினங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பதற்கான ‘நெகட்டிவ்’ முடிவு வந்தது. என்றாலும் தனிமைப்படுத்துதல் நடைமுறை முடிந்து மீண்டும் ஒரு முறை பரிசோதனை நடத்தப்பட்ட பிறகே சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் மறுபடியும் நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு இன்னும் தொற்று இருப்பதை குறிக்கும் ‘பாசிட்டிவ்’ முடிவு வந்துள்ளது. இதனால் மேலும் சில தினங்கள் அவர் சென்னையிலேயே தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்.