கிரிக்கெட்

வங்காளதேசத்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இலங்கை அணியின் புதிய கேப்டனாக குசல் பெரேரா நியமனம் - கருணாரத்னே, மேத்யூஸ் அதிரடி நீக்கம் + "||" + One day cricket against Bangladesh: Kusal Perera appointed as new captain of Sri Lanka - Karunaratne, Mathews sacked

வங்காளதேசத்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இலங்கை அணியின் புதிய கேப்டனாக குசல் பெரேரா நியமனம் - கருணாரத்னே, மேத்யூஸ் அதிரடி நீக்கம்

வங்காளதேசத்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இலங்கை அணியின் புதிய கேப்டனாக குசல் பெரேரா நியமனம் - கருணாரத்னே, மேத்யூஸ் அதிரடி நீக்கம்
வங்காளதேசத்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் புதிய கேப்டனாக குசல் பெரேரா நியமிக்கப்பட்டு உள்ளார். கருணாரத்னே, மேத்யூஸ் ஆகியோர் நீக்கப்பட்டு உள்ளனர்.
கொழும்பு, 

இலங்கை கிரிக்கெட் அணி வருகிற 16-ந்தேதி முதல் வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. ஒரு நாள் போட்டிகள் மே 23, 25, 28-ந்தேதிகளில் டாக்காவில் நடக்கிறது. வங்காளதேசத்துக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அணியில் அதிரடி மாற்றமாக கேப்டன் திமுத் கருணாரத்னே, விக்கெட் கீப்பர் தினேஷ் சன்டிமால், ஆல்-ரவுண்டர் மேத்யூஸ், திரிமன்னே ஆகியோர் நீக்கப்பட்டு உள்ளனர். புதிய கேப்டனாக விக்கெட் கீப்பர் குசல் பெரேரா நியமிக்கப்பட்டு உள்ளார். 30 வயதான குசல் பெரேரா 101 ஒரு நாள் போட்டி, 22 டெஸ்ட் மற்றும் 46 இருபது ஓவர் போட்டிகளில் ஆடியுள்ளார். துணை கேப்டனாக குசல் மென்டிஸ் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

வேகப்பந்து வீச்சாளர் சமிகா கருணாரத்னே, பேட்ஸ்மேன் ஷிரன் பெர்னாண்டோ ஆகிய புதுமுக வீரர்களும் அணிக்கு தேர்வாகியுள்ளனர்.