கிரிக்கெட்

புதுப்பிக்கப்பட்ட டெஸ்ட் கிரிக்கெட் தரவரிைச வெளியீடு: இந்திய அணி தொடர்ந்து முதலிடம் + "||" + Updated Test Cricket Rankings: India continue to top the list

புதுப்பிக்கப்பட்ட டெஸ்ட் கிரிக்கெட் தரவரிைச வெளியீடு: இந்திய அணி தொடர்ந்து முதலிடம்

புதுப்பிக்கப்பட்ட டெஸ்ட் கிரிக்கெட் தரவரிைச வெளியீடு: இந்திய அணி தொடர்ந்து முதலிடம்
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் புதிய தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.
துபாய், 

இந்திய கிரிக்கெட் அணி கடந்த பிப்ரவரி, மார்ச்சில் உள்நாட்டில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியதன் மூலம் ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்தது.

இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் டெஸ்ட் அணிகளின் வருடாந்திர புதுப்பிக்கப்பட்ட (அப்டேட்) புதிய தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 2017-18-ம் ஆண்டுக்குரிய போட்டிகளின் முடிவுகள் நீக்கப்பட்டன. தற்போதைய ‘அப்டேட்’ மூலம் 2020-ம் ஆண்டு மே மாதத்தில் இருந்து டெஸ்ட் போட்டிகளின் முடிவுகள் 100 சதவீதம் முழுமையாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய இரண்டு ஆண்டுகளில் நடந்த டெஸ்ட் போட்டிகளின் முடிவு 50 சதவீதம் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

இதன் அடிப்படையில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. அத்துடன் கூடுதலாக ஒரு புள்ளி பெற்று மொத்தம் 121 புள்ளிகளை பெற்றிருக்கிறது. இதே போல் 2 புள்ளியை கூடுதலாக பெற்ற நியூசிலாந்து 120 புள்ளிகளுடன் 2-வது இடம் வகிக்கிறது. இந்தியா-நியூசிலாந்து அணிகள் அடுத்த மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நேருக்கு நேர் மோத இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவுக்கு சரிவு

இதுவரை 3-வது இடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணி 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. 2017-18-ம் ஆண்டில் இ்ங்கிலாந்தை 4-0 என்ற கணக்கில் வென்ற முடிவு நீக்கப்பட்டதால் 5 புள்ளிகளை இழந்துள்ள ஆஸ்திரேலியா 108 புள்ளிகளுடன் இந்த சரிவை சந்தித்து இருக்கிறது. 4-ல் இருந்த இங்கிலாந்து அணியின் புள்ளி எண்ணிக்கை 3 அதிகரித்து மொத்தம் 109 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு உயர்ந்துள்ளது.

அதே சமயம் 9 புள்ளிகளை பறிகொடுத்த தென்ஆப்பிரிக்கா 80 புள்ளிகளுடன் 6-ல் இருந்து 7-வது இடத்துக்கு சறுக்கியது. டெஸ்ட் தரவரிசை வரலாற்றில் தங்களது முந்தைய மோசமான நிலையை சமன் செய்திருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரவரிசையில் இரு இடம் முன்னேறி 6-வது இடத்தை பிடித்திருக்கிறது. 2013-ம் ஆண்டுக்கு பிறகு வெஸ்ட் இண்டீசின் சிறந்த தரநிலை இதுவாகும்.

புதுப்பிக்கப்பட்ட புதிய தரவரிசை பட்டியல் வருமாறு:-

1. இந்தியா (121 புள்ளி)

2. நியூசிலாந்து (120)

3. இங்கிலாந்து (109)

4. ஆஸ்திரேலியா (108)

5. பாகிஸ்தான் (94)

6. வெஸ்ட் இண்டீஸ் (84)

7. தென்ஆப்பிரிக்கா (80)

8. இலங்கை (78)

9. வங்காளதேசம் (46)

10. ஜிம்பாப்வே (35)

தொடர்புடைய செய்திகள்

1. 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டி
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
2. 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அறிவிப்பு சர்ப்ராஸ் அகமது இடம்பெறவில்லை
20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. முன்னாள் கேப்டன் சர்ப்ராஸ் அகமதுக்கு இடம் கிடைக்கவில்லை.
3. உள்ளாட்சி தேர்தலில் எல்லா இடங்களிலும் போட்டியிடுவோம்: சீமான்
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை சின்ன போரூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வ.உ.சிதம்பரனார் உருவப்படத்துக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
4. மும்பை மேயர் பதவிக்கு சோனு சூட் போட்டி?
தமிழில் கள்ளழகர், கோவில்பட்டி வீரலட்சுமி, சந்திரமுகி, ஒஸ்தி உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ள பிரபல இந்தி நடிகர் சோனுசூட் கொரோனா காலத்தில் நடை பயணமாக சென்ற புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வாகன வசதிகள் செய்து கொடுத்து இந்தியா முழுவதும் கவனம் பெற்றார்.
5. அகில இந்திய காவல்துறை போட்டி: வெற்றி பெற்ற தமிழக போலீஸ் வீரர்-வீராங்கனைகளுக்கு பரிசு
அகில இந்திய காவல்துறை போட்டி: வெற்றி பெற்ற தமிழக போலீஸ் வீரர்-வீராங்கனைகளுக்கு பரிசு கூடுதல் டி.ஜி.பி. வழங்கினார்.