கிரிக்கெட்

இ - பாஸ் இல்லாமல் கோவா செல்ல முயன்ற பிரித்வி ஷா தடுத்து நிறுத்தம் + "||" + Prithvi Shaw stopped by cops enroute Goa over mandatory e-pass: Report

இ - பாஸ் இல்லாமல் கோவா செல்ல முயன்ற பிரித்வி ஷா தடுத்து நிறுத்தம்

இ - பாஸ் இல்லாமல் கோவா செல்ல முயன்ற பிரித்வி ஷா தடுத்து நிறுத்தம்
மராட்டியத்தில் இருந்து கோவாவுக்கு இ- பாஸ் இல்லாமல் செல்ல முயன்ற பிரித்வி ஷாவை போலீசார் தடுத்து நிறுத்தினார்.
மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் பிரித்வி ஷா, இ -பாஸ் ஆவணம் பெறாமல்  மராட்டிய மாநிலம்  கோல்பர்க்வழியாக  கோவா செல்ல முயன்ற போது, போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வந்த பிரித்வி ஷா, ஐபிஎல் தொடர் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், விடுமுறைக்காக கோவாவுக்கு காரில் புறப்பட்டார். 

ஆனால், சுற்றுலாத்தளமான கோவா செல்வதற்கு உரிய ஆவணம் (இ பாஸ்) பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், மாநில எல்லையில்  பிரித்விஷாவை தடுத்து நிறுத்திய போலீசார் மேற்கொண்டு  செல்வதற்கு அனுமதி அளிக்கவில்லை. 

இதையடுத்து, அங்கிருந்தபடியே தனது மொபைல் போன் மூலமாக இ- பாஸ் பெற பிரித்விஷா விண்ணப்பித்தார். இ பாஸ் கிடைத்ததையடுத்து, பிரித்விஷா செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

1. இலங்கையில் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 67- பேர் உயிரிழப்பு
இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 2,284- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. நாட்டில் இதுவரை 25 கோடிக்கும் அதிகமான டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது: மத்திய சுகாதாரத்துறை
நாட்டில் இதுவரை 25 கோடிக்கும் அதிகமான டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
3. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 238- பேருக்கு கொரோனா
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 238 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. தொற்று பாதித்து குணம் அடைந்தவர்களுக்கு தடுப்பூசி வேண்டாம்: மருத்துவ குழு பரிந்துரை
கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தத் தேவையில்லை என மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது.
5. பிரேசிலில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று
பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு மீண்டும் கணிசமாக அதிகரித்துள்ளது.