கிரிக்கெட்

டெஸ்ட் தரவரிசையில் முதலிடம்: இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பெருமிதம் + "||" + Top of the Test rankings: India coach Ravi Shastri is proud

டெஸ்ட் தரவரிசையில் முதலிடம்: இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பெருமிதம்

டெஸ்ட் தரவரிசையில் முதலிடம்: இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பெருமிதம்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின், வருடாந்திர புதுப்பிக்கப்பட்ட டெஸ்ட் அணிகளின் தரவரிசையில் இந்தியா 121 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

இந்தியாவை விட ஒரு புள்ளி குறைவாக பெற்றிருக்கும் நியூசிலாந்து 2-வது இடம் வகிக்கிறது. இந்த நிலையில் தொடர்ந்து ‘நம்பர் ஒன்’ ஆக வலம் வரும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு, தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பாராட்டு தெரிவித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘நம்பர் ஒன் மகுடத்தை சூடுவதற்கு மனஉறுதிமிக்க போராட்டமும் இலக்கை நோக்கி நிலையான முழு கவனமும் தேவை. இவற்றை தற்போதைய இந்திய அணி செய்து காட்டியுள்ளது. ‘நம்பர் ஒன்’ இடத்துக்கும், பாராட்டுக்கும் இந்திய வீரர்கள் தகுதியானவர்கள். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான விதிமுறைகளில் பாதியில் மாற்றம் செய்யப்பட்ட போதிலும் ஒவ்வொரு தடைகளையும் இந்திய அணி வெற்றிகரமாக கடந்து வந்திருக்கிறது. கடினமான நேரத்தில் நமது வீரர்கள் கடினமான கிரிக்கெட்டை விளையாடி இருக்கிறார்கள். அவர்களை நினைத்து சூப்பராக பெருமைப்படுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. டெஸ்ட் தரவரிசை: விராட் கோலி 814 புள்ளிகள் பெற்று 4-வது இடத்துக்கு முன்னேற்றம்
கோலி தவிர்த்து ரிஷப் பந்த் மற்றும் ரோகித் சர்மாவும் டாப்-10இல் உள்ளனர். இருவரும் 6-வது இடத்தில் நீடிக்கின்றனர்.